NTLRG_160311180625000000

கேப்டன் அமெரிக்கா வெற்றியைத் தொடர்ந்து மார்வெல் தயாரிப்பில் உருவாகிவரும் இரண்டாம் பாகமான கேப்டன் அமெரிக்கா சிவில் வார் திரைப்படத்தில் அயர்ன்மேனும் கேப்டன் அமெரிக்காவும் மோதிக்கொள்ளும் விதமாக வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த முதல் டிரைலரை தொடர்ந்து தற்போது எதிர்ப்பார்ப்பை மேலும் உச்சத்துக்கு கொண்டு செல்லும் விதமாக இரண்டாம் டிரைலர் ரிலிசாகி உள்ளது.

பல சூப்பர் ஹீரோக்கள் இணைந்து செய்யும் அதிரடி சாகசங்களும், கேப்டன் அமெரிக்காவுக்கும், அயர்ன்மேனுக்கும் ஏற்படும் மோதல்களையும் பார்த்துக் கொண்டே இருந்த ரசிகர்களை திடிரென வியப்பில் ஆழ்த்தும் விதமாக டிரைலரின் இறுதியில் கேப்டன் அமெரிக்காவின் ஷீல்டை தனது வலையால் இழுத்து அட்டகாசமாக எண்ட்ரி கொடுக்கிறார் ஸ்பைடர்மேன்.

சோனி நிறுவனத்தின் ஸ்பைடர்மேனும், மார்வெல் நிறுவனத்தின் கேப்டன் அமெரிக்காவும் எப்போது கூட்டணி ஏற்படுத்தியது என்று தெரியாமல் ஹாலிவுட் வட்டாரமே குழம்பி போயுள்ளது.

டாம் ஹாலண்டின் ஸ்பைடர்மேன் எண்ட்ரி 24 மணிநேரத்தில் 60 லட்சம் ரசிகர்களை பார்க்கவைத்துவிட்டது.

மூன்று சூப்பர் ஹீரோக்களும் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் வைப்பது நிச்சயம். 2016 ஏப்ரல் 27ம் தேதி படம் ரிலிசாகவுள்ளது.

 

Comments

comments