2016 ஜனவரி தொடக்கத்திலிருந்து, இந்த மூன்று மாதத்தில் குறைந்தது 51 படங்கள் வெளியாகியிருக்கும். இது  தமிழில் மட்டும் என்பது ஆச்சர்யமான தகவல்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது ஐந்து படங்களாவது வெளியாகிவிடுகிறது. இதில் கவனிக்கவேண்டிய செய்தியென்னவென்றால் அதில் பெரும்பாலானவை மினிமம் பட்ஜெட் படங்களே.  பொதுவாக ஏப்ரல், மே மாதங்கள் விடுமுறை தினமென்பதால் அதிகப்படியான படங்கள் வெளியாவது வழக்கம். அதேபோல் இந்தவருடம் ஏப்ரல் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமையென்பதால் ஏழு படங்கள் வெளியாகவிருக்கிறது.

low

ஹலோநான் பேய் பேசுறேன், ஓய், டார்லிங்2, நாரதன், உயிரே உயிரே, ஒரு மெல்லியகோடு, என்னுள் ஆயிரம் இந்த ஏழு படங்களும் வரும் வெள்ளிக்கிழமையை குறிவைத்து காத்திருக்கிறது. இதில் இரண்டு படங்கள் தள்ளிப்போகவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஏனெனில் இந்த ஏழு படங்களுமே குறைந்த பொருட்செலவில் உருவான மினிமம் பட்ஜெட் படங்கள்.

இந்தமாதிரியான மினிமம் பட்ஜெட் படங்கள் நல்ல தரமான படங்களாக இருக்கின்றன.  குறைந்த பட்ஜெட் படங்களே வசூலில் ஹிட் அடித்தும் வருகிறது. ஆனாலும் வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாவது முழுமையாக ஓடுமா என்று தெரியாததால் வினியோகஸ்தர்கள் குறைந்த பட்ஜெட் படங்களை வாங்கத் தயங்குவதாக சொல்லப்படுகிறது.

இதனால் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.  முறையான தியேட்டரும் வெளியீடும் கிடைத்தால் மினிமம் பட்ஜெட் படங்கள் வினியோகஸ்தரையோ, தயாரிப்பாளரையோ பாதிக்காது என்றும் கூறுகிறார்கள் திரையுலக அனுபவஸ்தர்கள்.

Comments

comments