10152638_1040278262709127_6370627097501170906_n

தமிழில் வசூல் நடிகராக மட்டுமல்லாமல், சிறந்த நடிகராகவும் இருந்து வருபவர் கார்த்தி. அவருடைய முதல் படத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார். அதற்குப் பிறகு அவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றிலும் அவருடைய நடிப்பால் பாராட்டப்பட்டார். நேற்று வெளிவந்த ‘தோழா’ படம் அவரது நடிப்புத் திறமையை மீண்டும் நிரூபித்திருக்கிறது. தெலுங்கிலும் ‘ஊப்பிரி’ என்ற பெயரில் வெளியான இந்தப் படம் கார்த்தியின் முதல் நேரடித் தெலுங்குப் படமாக அமைந்தது.

தமிழ் ரசிகர்கள் ரசிப்பது போலவே தெலுங்கு ரசிகர்களும் ‘ஊப்பிரி’ படத்தை வெகுவாக ரசித்து வருவதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கமர்ஷியல் மசாலா படங்களையும் ரசிக்கும் தெலுங்கு ரசிகர்கள் கிளாசிக் சினிமாக்களையும் ரசிக்கத் தவறுவதில்லை என்பதை இந்தப் படம் மீண்டும் புரிய வைத்துள்ளது.

கார்த்தி முதன் முதலில் தெலுங்கில் நேரடியாக நடித்திருப்பதால் அவர் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்பை அவர் சரியாகப் பூர்த்தி செய்து தற்போது தெலுங்கு ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார். படம் பற்றிய விமர்சனங்களை எழுதிய மீடியாக்க அனைத்தும் கார்த்தியை வெகுவாகப் பாராட்டியுள்ளன. சிலர் நாகார்ஜுனாவை விடவும் கார்த்தியின் நடிப்பு யதார்த்தம் என்றும் பாராட்டியிருக்கிறார்கள். இனி, தொடர்ந்து கார்த்தியை தெலுங்குப் படங்களில் பார்க்கலாம். கமல்ஹாசனுக்குப் பிறகு கார்த்திக்கு தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல பெயர் கிடைத்துவிட்டது என்கிறார்கள்.

 

Comments

comments