சென்னை, மலேசியா, தாய்லாந்து, கோவா என 115 நாட்கள் நான்ஸ்டாப் மாரத்தான் ஷூட்டிங் முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் பா.இரஞ்சித். எக்ஸ்ட்ரா எஃபர்ட் போட்டு வேலை பார்த்தாலும் எனர்ஜி குறையாமல் இருக்கிறார். “சூப்பர் ஸ்டார் ஜி… எப்படிக் குறையும் எனர்ஜி?” எனச் சிரிக்கிறார் `மெட்ராஸ்’ பட டைரக்டர்.

12802873_1557930721185367_4825045140646098805_n

‘கபாலி’ ரஜினி…’

“ரஜினி சார்,  சான்ஸே இல்ல. இயல்பான தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.  தன்னம்பிக்கை மிகுந்த கோபக்காரர்தான் ‘கபாலி’. ஆனா, பன்ச் டயலாக் பேச மாட்டார். நெஞ்சை ஊடுருவும் அர்த்தம் நிறைந்த வசனங்கள் நிறைய இருக்கும். அதைத்தான் ரஜினி சார் பேசியிருக்கார்.”

‘ராதிகா ஆப்தே..?’

“ரஜினி சாருக்கு ஜோடி இவர்தான் என ராதிகா ஆப்தேவை முடிவுசெய்தபோது, அதை விமர்சிக்காத ஆளே இல்லை. ஏகப்பட்ட கமென்ட்ஸ். ஆனா, எதிர்பார்த்ததைவிட தன்னுடைய எக்ஸ்ட்ராடினரி நடிப்பால் ஸ்கோர் பண்ணினார். தோட்டத் தொழிலாளி குமுதவல்லியாகவே வாழ்ந்திருக்கிறார்.

943961_1557930741185365_6908422927044677824_n

ரஜினியும் ராதிகா ஆப்தேவும் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை கோவாவில் படமாக்கினோம். திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பின்னர் கணவன் மனைவிக்குள் ஏற்படும் அன்னியோன்னியம்தான் தீம். முதுமையில் காதல் மொழிகளை கண்களால் பரிமாறிக்கொள்வது, கைகளின் மெல்லிய ஸ்பரிசத்தால் உருகிக் குழைந்து உணர்வுகளை வெளிப்படுத்துவது  என வேற மாதிரி ரொமான்ஸ் அது. சின்னச்சின்ன எக்ஸ்பிரஷன்ஸ்களால் அதை ரொம்ப நல்லா வெளிப்படுத்தி நடிச்சிருக்காங்க ராதிகா ஆப்தே.’’

‘டான் தன்ஷிகா..?’

Ccjm9tWUAAArI3T

“மாடர்ன் டிரெஸ்ஸில் ‘யோகி’ என்ற பேரோடு வர்றாங்க தன்ஷிகா. ‘கபாலி’ படத்துக்காக கெட்டப் மாத்தணும்னுதான் சொன்னோம். உடனே  ஓ.கே சொல்லி தன் நீண்ட கூந்தலை தியாகம் பண்ணிட்டு, பாய்கட்ல வந்து நிக்கிறாங்க.  ரஜினி சாருக்கு எதிரா சவால்விடுகிற தாய்லாந்து கேங்ஸ்டர் வேஷம் அவங்களுக்கு.’’

‘கபாலி’யின் ஃப்ரெண்ட்ஸ்..?’

12814673_1557930764518696_8963502850994757541_n

“கேங்ஸ்டர் சண்டையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக தனியாக ஸ்கூல் நடத்திவருகிறார் கபாலி. அந்தப் பள்ளியை நிர்வகிக்கும் ஆசிரியர் தமிழ்க்குமரனாக கலையரசன். இன்னொரு கேங்ஸ்டரின் மகனாக ‘அட்டகத்தி’ தினேஷ், ரஜினியின் கேங்ஸ்டர் ஸ்டைலில் கவரப்பட்டு ‘கபாலி’யுடன் சேர்ந்து கலக்குகிறார். இதுவரை ஜான்விஜயை வில்லனாக, காமெடி வேஷத்தில்தான் பார்த்திருப்பீங்க. ஆனா, ‘கபாலி’யில் ரஜினியின் ஆத்மார்த்தமான நண்பனாக, ஆலோசகனாக அமீர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மலேசியாவில் நடித்துக்கொண்டிருக்கும் பல நடிகர்,  நடிகைகள்  ‘கபாலி’யில் சின்னச்சின்னக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.’’

‘கபாலி’யின் எதிரிகள்..?’

Ccls241UMAAQ0ed

“மலேசியாவில் ரஜினிக்கு எதிரான கேங்ஸ்டராக கிஷோர்.  தைவானில் பிறந்து சீனாவில்  கலக்கும் வின்ஸ்டன் சாவ் ‘கபாலி’யுடன் மோதும் இன்னொரு மிகப் பெரிய டான்.’’

‘படம் ரெடியா?’

12804771_1557930811185358_5728412533964636545_n

“ரஜினி சார் தனது ஒரிஜினல் வெள்ளை தாடியோடு 75 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஷூட்டிங் ஆல்மோஸ்ட் கம்ப்ளீட்டெட்; இப்போ எடிட்டிங்; மார்ச்சில் டப்பிங், ரொம்ப சீக்கிரமே ரிலீஸ்!”

கபாலிக்காகக் காத்திருப்போம்!

kabali-1 p8f

Comments

comments