plcj4Kachgibd

ரஜினி-கமலுக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களான அஜித்-விஜய் இருவரும் முன்னணி கதாநாயகர்களாக உருவாகி விட்டனர். என்றாலும், ரஜினிக்கான மாஸ் இன்னமும் குறையவில்லை. அவரது படங்களுக்கென ஒரு ஓப்பனிங் இப்போதும் இருந்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெளியாகி வருகின்றனர். அந்த வகையில், உலகமெங்கிலும் ரஜினிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் அவரது கபாலி படத்தை இதுவரையில்லாத அளவுக்கு மிகப்பிரமாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் எஸ்.தாணு.

மேலும், ஏற்கனவே பல ஏரியாக்கள் விற்பனையாகி விட்ட நிலையில், தற்போது ஆந்திரா-கர்நாடகத்துக்கு கபாலியை வாங்குவதற்கு அங்குள்ள விநியோகஸ் தர்கள் சிலர் சென்னையில் முகாமிட்டு வியாபாரம் பேசி வருகின்றனர். அந்த வகையில், ரூ.45 கோடி வரை விலை கொடுத்து வாங்க அவர்கள் தயாராக இருப்பதாக கூறி வருகிறார்கள். அதேசமயம், முன்னபின்ன தயாரிப்பாளர் கேட்டாலும் அந்த தொகையை கொடுத்து கபாலியை வாங்கிவிட்டே செல்வது என்ற முடிவிலும் உள்ளனர்.

 

Comments

comments