0 (1)

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சிங்கர் நிகழ்ச்சியின் நம்பகத்தன்மை நாறிப்போய் கிடக்கிறது.

சூப்பர் சிங்கர் சீசன் 5 – ன் இறுதிப் போட்டி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இறுதிச்சுற்றில் ஃபரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்‌ஷன், லட்சுமி ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டார்கள்.

சூப்பர் சிங்கர் சீசன் 5 – நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களின் எதிர்பார்ப்பு ஃபரீதாவுக்கே முதல் பரிசு கிடைக்கும் என்பதாக இருந்தது.

சூப்பர் சிங்கர் சீசன் 5 – ன் இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் ஆலுமா டோலுமா பாடலைப் பாடிய ராஜகணபதிதான் முதல் பரிசை வெல்வார் என பலரும் எதிர்பார்த்தார்கள்.

அவருடைய இந்தப் பாடலுக்குத்தான் ரசிகர்களும் நடுவர்களும் அதிக வரவேற்பு அளித்தார்கள்.

ஆனால், ராஜ கணபதிக்கு நடுவர்களின் விருது மட்டுமே கிடைத்தது.

வாக்குகளின் அடிப்படையில் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டார்.

இரண்டாவது இடம் ஃபரீதாவுக்குக் கிடைத்தது. லட்சுமி, சியாத் ஆகியோர் கடைசி இரு இடங்களைப் பிடித்தார்கள்.

இந்நிலையில் ஆனந்த் அரவிந்தாக்‌ஷனுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது குறித்து கடும் சர்ச்சை எழுந்தது.

இந்தப்போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பே ‘ஆரோகணம்’, ‘நீர்ப்பறவை’, ‘பத்து எண்றதுக்குள்ள’ உட்பட சுமார் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பின்னணி பாடியவர் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன். இந்த உண்மையை மறைத்துவிட்டு புதுமுகம் போல் பொய்முகம் அணிந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசை பெற்றுள்ளார். இது விஜய் டிவி நிர்வாகத்துக்கும் தெரியும். தெரிந்தே இப்படியொரு மோசடியை செய்து விஜய் டிவி நிர்வாகம் தமிழ் மக்களை ஏமாற்றி உள்ளது – என்று மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இந்த மோசடியில் வசமாக சிக்கிக் கொண்டுள்ள விஜய் டிவி நடந்த தவறை ஒப்புக்கொண்டு, நிஜமான திறமைசாலியை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் என்பதற்கு மாறாக, தன் செயலை நியாயப்படுத்துவதுபோல் செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

SS5-495x700
அதுமட்டுமல்ல, விஜய் டிவியின் நிகழ்ச்சி தலைமை பொறுப்பாளரான பிரதீப்பும் விஜய் டிவியின் செயலை நியாயப்படுத்தி இருக்கிறார்…

“சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆனந்த் அரவிந்தாக்ஷனுக்கு முதல் பரிசு கொடுத்தது சர்ச்சைக்குரிய விஷயம் இல்லை. ஏனெனில், எங்களுடைய விதிமுறையில் எங்கேயும் திரைத்துறையிலிருந்தோ பாடகராக உள்ளவரோ சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்று எழுதப்படவில்லை.
திரைத்துறையில் உள்ளவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்கிற விதிமுறை முதலில் இருந்தது.

ஆனால் அது சரியாக வராததால் அந்த விதிமுறையை நீக்கிவிட்டோம்.

ஆரம்ப காலகட்டங்களில், அதாவது நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால்வரை பின்னணி பாடகர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதியில்லை என கூறியிருந்தோம்.

ஆனால், நாங்கள் குரல் தேர்வு செய்யும் போது, நூற்றுக்கணக்கான மக்கள், தொழில் ரீதியாக, இயக்குநர்களாகவோ அல்லது பக்தி பாடல் ஆல்பங்களை வெளியிட்டவர்களாவோ இருந்தனர்.

எனவே இந்த விதிமுறையை நாங்கள் அகற்றினோம். சூப்பர் சிங்கர் சீனியரில் இரு சீசன்களுக்கு முன்னர் இந்த விதிமுறை அகற்றப்பட்டது.

எனவே அந்த விதிமுறை தற்போது செல்லுபடியாகாது

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருபவர்கள் பலரும், ‘நான் கோரஸ் பாடியிருக்கேன். ஆல்பம் வெளியிட்டிருக்கேன். ஒரு பாட்டு பாடியிருக்கேன். அது வெளிவருமா? வராதா? எனத் தெரியல’ என்றும் வருகிறார்கள்.

நிகழ்ச்சிக்கு வருபவர்கள் இதுவரைக்கும் ஒரு பாட்டுக்கூட பாடியிருக்கக்கூடாது என்று எங்களது விதிமுறைகளில் இல்லை.

பங்கேற்பாளர்கள் ஏற்கெனவே பாடியிருந்தால் அது நடுவர்கள், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சக திறமைசாலிகள் வரைக்கும் தெரியும்.

எப்படியும் மூடி மறைக்க முடியாது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முன்னோட்டத்தில்கூட செல்லக் குரலுக்கான தேடல் என்றுதான் அறிவிக்கிறோம்.

புதிய குரலுக்கான தேடல் என்று அறிவிப்பு வெளியிடவில்லை. இதை இங்கே மறைக்க ஒன்றுமே இல்லை. பங்கேற்பாளர்கள் ஒரு சீசனுக்குள் வந்த பிறகு அந்த சீசன் முடியும் வரைக்கும் வெளியே சென்று பாடக்கூடாது என்றுதான் விதிகள் வைத்திருக்கிறோம்.

அதைத் தவிர மற்ற எதுவும் இல்லை. நல்ல குரலை தேர்வு செய்கிறோம் என்பதுதான் எங்கள் எண்ணம்.

ஆனந்த் அரவிந்தாக்ஷன் கூறும்போதுகூட, ‘நான் இந்த மேடைக்கு சீனியர்தான். வெளியே எனக்கு இதுவரைக்கும் கிடைக்காத அடையாளத்தை இந்த மேடை ஏற்படுத்திக்கொடுக்கும் என்றே உள்ள வருகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். ஆகவே, இது எங்களைப் பொறுத்தவரைக்கும் சர்ச்சைக்குரிய விஷயம் இல்லை. தொடர்ந்து இதே மாதிரி நல்ல குரலை அடையாளப்படுத்துவோம்.

ஆனந்த் அரவிந்த் தாக்சன், ஆரம்பத்தில் அளித்த பேட்டியிலேயே தான் படங்களில் பாடியுள்ளதாகவும் ஆனால் தகுந்த வாய்ப்பு கிடைக்காததால் ஒரு மாற்றத்துக்காக சூப்பர் சிங்கரில் கலந்துகொள்வதாகவும் கூறினார்.’’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரதீப்.

அவருடைய பேச்சு தமிழக மக்களை மேலும் ஆவேசமாக்கி இருக்கிறது.

ஃபேஸ்புக், ட்விட்டரில் விஜய் டிவியை கெட்ட வார்த்தைகளால் திட்டித்தீர்க்கிறார்கள்.

விஜய் டிவி செய்த கேவலமான இந்த வேலையை எதன்பொருட்டும் நியாயப்படுத்தவே முடியாது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சியில் ஒரு சமையல்காரர் கலந்து கொள்வதை விஜய் டிவி அனுமதிக்குமா?

ஜோடி அல்லது கிங் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியில் சினிமாவில் நடன இயக்குநராக உள்ள ஒருவர் கலந்து கொள்ள முடியுமா?

Comments

comments