maxresdefault (20)

சினிமா எடுக்க பணம் மட்டும் போதாது. துணிச்சலும் வேண்டும்.

அது இல்லாததினால்தான் அரசு மான்யம், திரைப்பட விருதுகள், வரிவிலக்கு சலுகை என பல விஷயங்கள் மறுக்கப்படும்போது கூட கேள்வி கேட்காமல் வாய்பொத்தி அடிமையைப்போல் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் சினிமாக்காரர்கள்.

இப்படிப்பட்டவர்கள் அரசியல் படம் எடுக்கலாமா?

அரசியல் படம் எடுப்பவர்கள் அதனால் ஏற்படும் விளைவுகளையும் சந்திக்க வேண்டும்.

எதற்காக இப்படியொரு பில்ட்அப்?

பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், நிக்கி கல்ராணி, பாலசரவணன் நடிப்பில் அறிமுக இயக்குநர் சரத் இயக்கத்தில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள படம் ‘கோ-2’.

கோ படத்தைப் போலவே இந்தப்படமும் அனல் பறக்கும் அரசியல் படமாம்.

ஆளும் கட்சியை திட்டாமல் அரசியல் படம் எடுக்க முடியுமா?

கோ-2 படத்தில் சீன் பை சீன் ஆளும்கட்சியை துவைத்து தொங்கப்போட்டிருக்கிறார்களாம்.

இந்தப்படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டன.

கடந்த வருடமே வெளியாகி இருக்க வேண்டிய படம்.

ஆளும்கட்சியை கடுமையாக தாக்கி காட்சிகளும், வசனங்களும் படத்தில் இருப்பதால் கோ-2 படத்தை வெளியிட்டால் அம்மாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமே என்ற பயத்தில் படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் தயாரிப்பாளர்.

தற்போது தேர்தல் நெருங்கிவிட்டதால் கோ-2 படத்தை வெளியிட இதுவே சரியான தருணம் என்று முடிவு செய்துள்ளார்.

கோ 2 படத்தை இப்போது ரிலீஸ் செய்தால் தேர்தல் பரபரப்பில் இருக்கும் ஆளும்கட்சி தரப்பு நம் படத்தை கண்டுகொள்ளாது என்பது மட்டுமின்றி, தேர்தல் முடிந்து புதிய ஆட்சி வந்துவிட்டாலும் கோ-2 படத்தை வெளியிடுவதில் பிரச்சனை வரும் என்பதாலும் எப்படியாவது அதற்கு முன் படத்தை வெளியிட்டாக வேண்டும் என்று ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதே நாளில்தான் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து வரும் ‘மனிதன்’ படமும் வெளியாக இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலினின் படங்கள் வெளியாகும் தினத்தில் வேறு படங்கள் வெளியானால் அந்தப் படத்துக்கு தலைவலிதான்.

தன்னுடைய படத்துக்கு போட்டியாக திரைக்கு வரும் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காதவாறு செய்துவிடுவார்.

கோ-2 படத்துக்கு இப்படி ஒரு ஆபத்து இருப்பதால் தயாரிப்பாளர் தரப்பு வேறு தேதியைத் தேடி காலண்டரைப் புரட்டிக்கொண்டிருக்கிறது.

சினிமா எடுக்க பணம் மட்டும் போதாது பாஸ்.

துணிச்சலும் வேண்டும்.

Comments

comments