மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கமுத்து, சென்ராயன் மற்றும் நைனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “அட்ரா மச்சான் விசிலு”. இப்படத்தை திரைவண்ணன் இயக்கியுள்ளார். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்களை கேட்ட ஈராஸ் நிறுவனத்தினர் பெரிய விலை கொடுத்து பாடல்களின் உரிமையை பெற்றுள்ளனர். மேலும் இந்தப்படத்தின் பாடல்கள் இந்த வருடத்தின் “ஹிட்” பாடல்களாக அமையும் என தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் ஒரு பாடலை ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார். ரொம்ப பிசியாக ஜி.வி. நடித்து கொண்டு இருந்த போதும் பாடல் இசையை கேட்டு உடனடியாக பாடி கொடுத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் பாடல்கள் வருகிற மார்ச் 24 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் காதுகளை குளிர வைக்க உள்ளது. படம் ஏப்ரல் 14 அன்று திரைக்கு வர உள்ளது என்று அந்தப் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Rajini-1

இந்தப்படம் பற்றிய ஒரு சின்ன ப்ளாஷ்பேக்,

கடந்த ஆண்டு, லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடுகேட்ட விநியோகஸ்தர்கள் இணைந்து புதுப்படம் தயாரிக்கின்றனர். ‘லிங்கா’ பட சர்ச்சையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக செய்திகள் பரவின. இதில் ரஜினியை அவமதிப்பது போன்று காட்சிகள் இடம் பெறுவதாகவும் ரஜினி வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. அவரை வைத்து ரஜினியை கேலி செய்யும் காட்சிகளை எடுக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது..

இது குறித்து அப்போது பவர் ஸ்டார் சீனிவாசன்  கூறியதாவது:–

லிங்கா விநியோகஸ்தர்கள் எடுக்கும் படத்தில் நான்  நடிப்பது உண்மைதான். இது முழுக்க காமெடி படம். யார் மனதையும் புண்படுத்தும் காட்சிகள் இருக்காது.
இந்தப் படத்தின் கதையானது தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி கதாநாயகனாக இருக்கும் எனக்கு திடீரென ஒரு படம் தோல்வி அடைகிறது. அந்த படத்தின் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்கிறார்கள். அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தேனா என்பது கதை. காமெடி கதையம்சம் உள்ள படமாகத்தான் இதை எடுக்கிறோம். ஆகஸ்டில் படப்பிடிப்பு நடக்கிறது.

இந்தப் படத்தில் ரஜினியை அவமதிப்பது போன்ற காட்சிகள் எதுவும் இல்லை. இதை நிபந்தனையாக வைத்துதான் இந்த படத்திலேயே நடிக்க ஒப்புக் கொண்டேன்.
ரஜினியின் பிரபல பாடலான வந்தேன்டா பால்காரன் பாடல் வந்தேன்டா பவர்காரன் என மாற்றப்பட்டு இந்த படத்தில் இடம் பெறுகிறது என்று கூறியிருந்தார்.
அவர் சொன்ன அந்தப்படம்தான் இந்த அட்ரா மச்சான் விசிலு என்பது குறிப்பிடத்தக்கது. இதில்தான் ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார்.

லிங்கா படத்தையும் ரஜினியையும் நினைவு படுத்துகிற படமென்பதால் நிச்சயம் பரபரப்பு ஏற்படும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

NTLRG_160313130108000000

Comments

comments