???????????????????????????????????????????????????

எங்காவது நுண்ணறிவு பிரிவில் வேலைக்கு போகிற அளவுக்கு மூக்கு நுனியில் சென்சாரோடு திரிவார்கள் போலிருக்கிறது இந்த அஜீத் ரசிகர்கள். அதெப்படிய்யா என்று ஆச்சர்யப்படுகிற அளவுக்கான நியூஸ்தான் இது. இன்று திரைக்கு வந்திருக்கும் அடிடா மேளம் படத்தில் நாடோடிகள் அபிநயா முதல் முறையாக தமிழில் சிங்கிள் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அவரை கட்டி மேய்க்கும் மேரேஜ் அரேஞ்சராக அபய் கிருஷ்ணா நடித்திருக்கிறார். படம் சிரிப்பு மூட்டும் ரகத்தை சேர்ந்ததாக கூறுகிறது யூனிட். (சிரிப்பு வருதா இல்லையா என்பதை தியேட்டரில் ரசிகர்களின் முக பொலிவை வைத்துதான் தீர்மானிக்க முடியும்) அதற்கிடையில் ஒரு பலே தகவல்.

இந்த படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட இரண்டாம் நாளே அஜீத் பேன்ஸ் வலைதள குழுவிடமிருந்து அபய் கிருஷ்ணாவின் போன் நம்பரை தேடிப்பிடித்து பேசிவிட்டார்களாம். உங்க ட்ரெய்லர் ஓப்பனிங்ல நீங்க வேதாளம் படத்தின் க்ளைமாக்சில் வரும் தீம் மியூசிக்கை பயன்படுத்தியிருக்கீங்க. அதுக்காகவே உங்களுக்கு பாராட்டுகள் என்றார்களாம். அதிர்ந்து போன அபய் கிருஷ்ணா இவ்வளவு துல்லியமாவா இருக்கு உலகம் என்று ஆச்சர்யப்பட்டபடி இன்னொரு தகவலை சொன்னாராம். படத்தில் ஆங்காங்கே தல பேசும் வசனத்தையும் பேசியிருக்கேன். நான் அவரோட ரசிகன் என்றாராம். அதற்கப்புறம் கிடைத்ததுதான் ஆனந்த சலுகை.

இது ஒண்ணு போதும். உங்க படத்துக்கு இலவசமா ஆன் லைன் பிரமோஷன் பண்றோம். நல்லாயிருங்க என்றார்களாம். சொன்னபடியே இந்த படத்தின் ட்ரெய்லரை ஷேர் பண்ணியும் இருக்கிறார்கள். அட… ஒரு படத்தை ஓட வைக்க இம்புட்டு வழியிருக்கா ஆசாமிகளே….

Comments

comments