0 (1)

நடிகர் ரஜினி, இரு தினங்களுக்கு முன்பு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். நடிகர் ரஜினி, திடீரென, சென்னை, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நலக்குறைவால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில், மாலை, 6:30க்கு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதுகுறித்து, மருத்துவமனையில் விசாரித்தபோது, நடிகர் ரஜினி, பரிசோதனைக்காக காலை, 10:30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக நிபுணர் ராஜன் ரவிச்சந்திரன் குழுவினர், அவரை பரிசோதித்தனர். பின், மாலையில் அவர்வீடு திரும்பினார். அவசர சிகிச்சை ஏதும் அளிக்கப்படவில்லை என்றனர்.

ஒரு புறம் இது சாதாரண செக் அப் என்று கூறினாலும், 2.ஒ காண சூட் 22 அன்று மீண்டும் தொடங்க இருந்தது, அதுவும் மிக பிரமாண்டமான அரங்குகள் சுமார் 20 கோடி செலவில் அமைக்கப்பட்டு, படத்தின் முக்கிய காட்சியான அக்ஷய் குமாரும் ரஜினியும் மோதுவதுபோல் எடுக்கப்பட இருந்தது , பட்பிடிப்பிற்கு எல்லாம் தயாராகவும். வெளிநாட்டு சண்டை கலைஞ்சரகளும் சென்னை வந்த நிலையில், திடீரென திட்டமிட்ட படபிடிப்பு நிறுத்தப்பட்டதுடன்., சில மாற்றங்கள் செய்யப்பட்டது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் பார்த்தால் 2.ஒ வின் மேக் அப் மற்றும் இதர ஷூட் வேலைகளால்தான் ரஜினிக்கு உடல் சற்று சொர்வடைந்திருப்பார் என்று தெரிகிறது. இந்தியாவின் பிரமாண்டமான படம் மற்றும் படத்தின் முக்கிய சண்டை காட்சி எடுக்கும் நேரத்தில் இவ்வாறு ஆனது ஒரு புறம் இருக்க., ரஜினியின் உடல் நலமே முக்கியம் என்று ஷங்கருக்கும், படகுழுவினருக்கும்., ரசிகர்களுக்கும் விருப்பம். விரைவில் ரஜினி சமந்தப்பட்ட  காட்சிகள் படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தற்போது ரஜினி பூரண நலமுடன் இருக்கிறார் யாரும் கவலை பட வேண்டாம் என்பதே நமக்கு கிடைத்த கடைசிகட்ட தகவல்.

 

Comments

comments