12647277_1033604910016281_8024622389538053928_n

நாளை பெப்ரவரி 5 திரைக்கு வர இருக்கும் விசாரணை திரைப்படம், இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படதிர்க்கும் கிடைக்காத ஒரு மாபெரும் பாராட்டை இப்படம் பெற்று வருகிறது.

சர்வதேச திரைப்பட விழாக்களில் பரிசும் பாராட்டும் வாங்கிய இப்படம் சிறு தினங்களுக்கு முன் முக்கிய பிரமுகர்களுக்க்ம், ஊடக மற்றும் விமர்சணர்களுக்கும் பிரத்யேகமாக பார்க்க ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இப்படத்தை பார்த்த அனைவரும் வியப்புடன் வெற்றிமாறனை புகழ்ந்து தள்ளினர். இவ்வரிசையில் தற்போது ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் “விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இது வரை பார்த்ததில்லை. உலக படவரிசையில் ஒரு தமிழ் படம்.வாழ்த்துக்கள் வெற்றிமாறன் – தனுஷ்” என்று பாராட்டி உள்ளார்.

இதற்கு முன்பே கமலும் “நல்ல சினிமாவின் தாக்கத்தை வெற்றிமாறனின் மனதில் பதித்துச்சென்ற என் பாலுமஹேந்திராவிற்கு நன்றி நேற்று விசாரணை படம் பார்த்து வியந்தேன்” என்று புகழ்ந்து உள்ளார்.

எனவே ரசிகர்கள் இப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏக போகத்துக்கும் எகிறி உள்ளது. மக்களே நாளை நீங்களும் விசாரணை திரைப்படம் பார்த்து உங்கள் கருதுக்களை  தெரிவியுங்கள்.

-நன்றி

Comments

comments