_cf875a3e-89e5-11e5-8873-614af01f27d5

தமிழ் சினிமாவில் விஜய், அஜீத், சூர்யா போன்ற நடிகர்களுக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரது ரசிகர்களுக்கும் விக்ரமை பிடிக்கிறது. அந்த அளவுக்கு தனது மாறுபட்ட நடிப்பினால் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வைத்துள்ளார் விக்ரம். அதன்காரணமாக, அவர் வெளியூர்களுக்கு செல்லும்போது அவரை சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்வதில் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் விக்ரமுக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார்களாம்.

மேலும், சில தினங்களுக்கு முன்பு அவர் கேரளாவில் நடைபெற்ற ஒரு திரைப் பட விழாவுக்கு சென்றிருந்தபோது அங்குள்ள ரசிகர்கள் விக்ரமை சந்திக்க போராடினார்களாம். ஆனால் ரசிகர்கள் விக்ரமை நெருங்கியபோது காவலாளிகள் அவர்களை துரத்தியடித்துள்ளனர். இதைப்பார்த்த விக்ரம், காவலாளிகளை தடுத்து, அந்த ரசிகர்களை சந்தித்து செல்பி எடுத்துக்கொண்டுள்ளார். அப்போது அவர் மீது அதிக பாசம் கொண்ட ஒரு ரசிகர் ஒருவர், விக்ரமின் கன்னத்தில் முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினாராம். இந்த சம்பவம் விக்ரமை நெகிழ வைத்து விட்டதாம்.

இதோ அந்த வீடியோ பதிவு  :

Comments

comments