001

சர்வதேச இணைய தகவல் பெட்டகமான விக்கிபீடியா இணையதளம் வெளியிட்டுள்ள சர்வதேச அளவிலான சர்ச்சைக்குரிய பிரபலங்கள் பட்டியலில் ரஜினி, விஜய் உள்ளிட்ட 6 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் நடிகர் விஜய், ரஜினி, ஷாரூக் ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

விக்கிபீடியா இணையதளம், பிரபலங்களுக்கென பிரத்யேக பக்கத்தை உருவாக்கி அதில் அவ்வப்போது மாற்றங்களையும் மேற்கொண்டு வருகிறது. விக்கிபீடியா இணையதளம் துவங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதிகளவில் மாற்றம் மேற்கொள்ளப்பட்ட பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 2001ம் ஆண்டு துவங்கி தற்போது வரை, சம்பந்தப்பட்டவர்களின் பக்கத்தை குறைந்தபட்சம் 10 ஆயிரம் முறை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட 127 பிரபலங்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 127 பட்டியலில், 6 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் மகாத்மா காந்தியை தவிர்த்து மற்ற 5 பேரும் திரைத்துறையை சேர்ந்தவர்கள்.

* நடிகர் விஜய்யின் பக்கம், 17,736 முறை மாற்றங்கள் செய்யப்பட்டு, பட்டியலில் 15வது இடத்திலும்,

* பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் பக்கம், 13,293 முறை மாற்றங்கள் செய்யப்பட்டு பட்டியலில் 47வது இடத்திலும்,

* பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் பக்கம், 11,492 முறை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு பட்டியலில் 88வது இடத்திலும்,

* நடிகர் ரஜினிகாந்தின் பக்கம், 11,360 முறை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு பட்டியலில் 93 வது இடத்திலும் மற்றும்

* பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் பக்கம், 10,428 முறை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு பட்டியலில் 119 வது இடத்திலும் உள்ளது.

இந்த பட்டியலின் முதல் இடத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் (45,866 முறை மாற்றம்), இரண்டாமிடத்தில் அமெரிக்க பாப் இசை கலைஞர் மைக்கேல் ஜாக்சன் (28,160) உள்ளனர்.

Comments

comments