0

வடிவேலு ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று எப்போது முடிவெடுத்தாரோ அப்போதில் இருந்தே மொட்ட ராஜேந்திரனின் காமெடி மார்க்கெட் சூடு பிடித்து விட்டது. அதாவது வடிவேலுவை மனதில் கொண்டு காமெடி ட்ரேக் ரெடி பண்ணும் டைரக்டர்கள் அவரை தேடிச்சென்று கதையை சொல்லும்போது, அவர் அந்த கதையில் தனக்கு முக்கியத்துவம் இல்லை அல்லது அந்த படத்தின் ஹீரோவுக்கு இணையாக எனக்கான வேடமும் இருக்க வேண்டும் என்று பேசுவதை அடுத்து, பின்வாங்கி விடுகிறார்கள் டைரக்டர்கள்.

அப்படித்தான் விஜய் நடித்து வரும் தெறி படத்தில் நடிப்பதற்கும் முதலில் வடிவேலுவை அட்லி அணுகியபோது, கதையில் காமெடிக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லையே என்று சொல்லி தவிர்த்து விட்டார். அதன்பிறகுதான் வடிவேலு நடிக்க வேண்டிய வேடத்திற்கு நான் கடவுள் ராஜேந்திரனை புக் பண்ணினார் அட்லி.

அந்த படத்தை அடுத்து தற்போது மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்து வரும் ராகவா லாரன்சும், அந்த படத்தில் காமெடியனாக நடிக்க வடிவேலுவை சந்தித்து பேசினாராம். ஆனால், நீங்கள் இரண்டு வேடத்தில் நடிக்கும்போது எனக்கு ஸ்கோர் பண்ண பெரிதாக வாய்ப்பு இருக்காதே என்று சொல்லி அந்த வாய்ப்பை தட்டிக்கழித்து விட்டாராம் வடிவேலு. அதனால் இப்போது அந்த படத்திலும் வடிவேலு நடிக்க வேண்டிய வேடத்திற்கு நான் கடவுள் ராஜேந்திரனை புக் பண்ணியிருக்கிறாராம்
.

 

Comments

comments