0 (1)

‘தலைக்கு மேல போயாச்சு. இதில் சாண் என்ன முழம் என்ன?’ என்ற சிந்தனை வந்தாலொழிய இப்படியொரு காரியத்தை செய்திருக்க முடியாது. நேற்று கோவை காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான சிம்பு, அங்கு நடத்திய போலீஸ் விசாரணையை தைரியமாக எதிர் கொண்டார். அப்போது கேட்கப்பட்ட முப்பத்தைந்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொன்னாராம் அவர். அங்குதான் அனிருத் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதிருக்கட்டும்…

அதென்ன வானத்தை போல விஜயகாந்த்? சிம்புவுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?

அந்த படத்தில் தம்பிகளை ஒண்டியாளாக நின்று வளர்ப்பார் அண்ணன் விஜயகாந்த். அப்போது மழை வந்து வீடு ஓழுகும். தம்பிகள் உறங்க வேண்டுமே என்று ஒரு பெரிய குடையை அவர்களின் தலைக்கு நேராக பிடித்துக் கொண்டு விடிய விடிய உறங்காமல் நின்று கொண்டிருப்பார் கேப்டன். ஜனங்களை தாரை தாரையாக அழ வைத்த பாசக்கார காட்சி அது.

simbu-in-police-station

கிட்டதட்ட அப்படியொரு காட்சியை நினைத்துப்பாருங்கள். குடையை பிடித்துக் கொண்டிருப்பவர் சிம்பு. குடைக்கு கீழே நிம்மதியாக உறங்குபவர்தான் அனிருத். இப்படியொரு சென்ட்டிமென்ட் பேக்கேஜில் அனிருத்தை காப்பாற்றியிருக்கிறார் சிம்பு. “இந்த பீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் சம்பந்தம் இல்லை. இந்த பாடலை பாடியது நான்தான். என்னுடன் அப்போது இருந்தவர்கள் இன்னார்தான் ” என்று சிலரது பெயரையும் அதிகாரிகளிடம் குறிப்பிட்டு விட்டு வந்திருக்கிறார். என்ன காரணத்திற்காகவோ அவர் அனிருத்தை காப்பாற்றியிருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். இக்கட்டான நேரத்தில் நண்பனையும் போட்டுக் கொடுக்காத அவரது நல்ல புத்திக்காக ஒரு வெல்கம்!

முன்னேயே சொல்லியிருக்க வேண்டிய முன் குறிப்பு, ஆனால் பின் குறிப்பாக-முதலில் இந்த பாடலுக்கு இசையமைத்தவர் அனிருத் என்று சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் கூறியிருந்ததை இங்கே கருத்தில் கொள்ளவும்!

Comments

comments