0

இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் புலி. இப்படம் ரசிகர்களிடன் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

மேலும், பலரும் இப்படத்தை அதிக தொகை கொடுத்து வாங்கியதால், பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால், பி.டி.செல்வகுமார் அடுத்து தயாரித்த போக்கிரி ராஜா படத்திற்கு ரெட் கார்ட் போடும் நிலைமை வந்தது.

இதை தொடர்ந்து இன்று புலி தயாரிப்பாளர் மற்றும் புலி படத்தின் விநியோகஸ்தர்கள் ஆகியோர் நஷ்ட ஈடு குறித்து பேசுவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மேலும், இன்றே இந்த பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Comments

comments