0

பிப்ரவரி 12ம் தேதி நாளை, “ஜில் ஜங் ஜக், வில் அம்பு, அஞ்சல, இரண்டு மனம் வேண்டும்’ ஆகிய படங்கள் நாளை வெளிவருகின்றன.

கடந்த மாதக் கடைசியில் வெளிவந்த ‘அரண்மனை 2′ படம் சித்தார்த்துக்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. இருந்தாலும் அந்தப் படத்தில் அவருக்கு அப்படி ஒன்றும் பெரிய முக்கியத்துவம் இல்லை. படத்தின் நாயகனாக சுந்தர் .சி தான் தெரிந்தார். தனி ஹீரோவாக ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ள சித்தார்த் சொந்தமாகத் தயாரித்த படம் ‘ஜில் ஜங் ஜக்’ படம் நாளை வெளியாகிறது. மல்டி பிளக்ஸ் தவிர்த்து இந்தப் படம் மற்ற ஏரியாக்களில் போய் சேருமா என்பதுதான் பெரிய கேள்வி.

ஒரு சில படங்களில் நடித்துள்ள ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் நாயகர்களாக நடித்துள்ளார்கள். இயக்குனர் சுசீந்திரன் இந்தப் படத்தை வழங்குவதால் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அதை இந்தப் படம் பூர்த்தி செய்யுமா என்பது நாளை தெரிந்துவிடும்.

விமல், பசுபதி, நந்திதா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அஞ்சல’. ஒரு டீக்கடையைச் சுற்றி முழு படமும் நகரும் கதை. ‘மஞ்சப் பை’ படத்திற்குப் பிறகு விமலுக்கு எந்தப் படமுமே வெற்றிப் படமாக அமையவில்லை. அதை இந்தப் படம் மாற்றினாலே போதும்.

கடந்த வாரம் வெளிவருவதாகச் சொல்லப்பட்ட ‘இரண்டு மனம் வேண்டும்’ படம் சில காரணங்களால் கடந்த வாரம் வெளியாகவில்லை, நாளை வெளியாகிறது.

நாளை வெளிவரும் நான்கு படங்களுமே முன்னணி ஹீரோக்கள் இல்லாத சிறு பட்ஜெட் படங்கள்தான், ரசிகர்கள் இந்தப் படங்களை எப்படி வரவேற்கப் போகிறார்கள் என்பது இன்றே யூகிக்க முடியாத ஒன்றாகத்தான் இருக்கும்.

 

Comments

comments