001

சமீபகாலமாக படங்கள் ஓடும் நாட்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் முக்கியத்துவம் வாய்ந்த மல்டி பிளக்ஸ் தியேட்டர்களை கைப்பற்றுவதில் திரைக்குப்பின்னால் தயாரிப்பாளர்களுக்கிடையே பெரிய அக்கப்போரே நடந்து கொண்டிருக்கிறது. அதோடு, எத்தனை பெரிய நடிகர்களின் படங்களாக இருந்தாலும், அதை ரிலீஸ் செய்யும் நேரம் ரொம்ப முக்கியமாகி விட்டது. அந்த வகையில், தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டதால், கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த சில படங்களின் சில படங்களில் ரிலீஸ் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி படத்தை கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் முடிவெடுத்திருந்தனர். அந்த நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது உறதியாகி விட்டதால், தெறி படத்தை தேர்தல் பரபரப்புக்கு முன்பே வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. அதேபோல், தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்த ரஜினியின் கபாலி படத்தை இப்போது தேர்தலுக்கு பிறகு வெளியிடலாம் என்று அப்படதயாரிப்பாளர் எஸ்.தாணு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Comments

comments