0

ஒவ்வொரு முறை நடிகர் சங்கத்தின் காலி நிலத்திற்குள் நுழையும் போதெல்லாம் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிவிட்டுதான் மறுவேலை பார்க்கிறார் விஷால். அவரது சினிமாவுலக வாழ்க்கையை நடிகர் சங்க எலக்ஷனுக்கும் முன், நடிகர் சங்க எலக்ஷனுக்கு பின் என்று இரண்டாக பிரித்து அந்தஸ்தை ஏற்றிக் கொடுத்த இடமல்லவா? அதனால்தான் இந்த பக்தியும் பரவசமும்!

கல்யாணம் கூட கட்டிடம் எழுந்த பின்புதான் என்று கூறிவரும் அவருக்கு, அல்லும் பகலும் ஒரே நினைப்புதான் இருக்க முடியும். சரி… இப்போதென்ன நிலவரம்? எல்லாத்துக்கும் ஃபண்ட் வேணுமில்ல? அதை திரட்டுகிற முயற்சியில் முழு வேகத்தில் இறங்கிய விஷாலுக்கு, அது ஒன்றும் அவ்வளவு சாதாரணமான மேட்டராக தெரியவில்லை முதலில் ஒரு படத்தில் எல்லா நடிகர்களும் நடித்து அதிலிருந்து வரும் கலெக்ஷனை வைத்து சங்க கட்டிடத்தை கட்டிவிடலாம் என்றவருக்கு இப்போது ரூட்டை மாற்றி மேப்பை போட வேண்ட வேண்டிய கட்டாயம். அதன் விளைவாக முதலில் நட்சத்திர கிரிக்கெட் நடத்துவது என்று தீர்மானித்திருக்கிறார்கள். அதற்கு ரஜினியும் கமலும் கட்டாயம் வருவார்கள் என்பது தனிக்தை. இப்போது அந்த நட்சத்திர கலை விழாவின் ஒளிபரப்பு உரிமையை எந்த சேனலுக்கு கொடுப்பது என்பதில்தான் குழப்பம்.

வெட்டருவா பல்லாயிருந்தாலும், வாயில சிக்குன இரைக்கு வீச்சருவா பல்லு இருந்தா என்ன பண்ணுவதாம்? அப்படியொரு சிக்கல்தான் இப்போது விஷாலுக்கும் நாசருக்கும். முதலில் இந்த சேனல் உரிமையை ஒன்பது கோடி தருகிறவர்களுக்கு தரலாம் என்று நினைத்தார்களாம். முக்கிய சேனல்களிடம் பேசினால், அவர்கள் அதற்கெல்லாம் மசிவதாக தெரியவில்லை. கடைசியில் ஏழு கோடிக்கு இறங்கி வந்தார்களாம் இவர்கள்.

“நீங்க நடிகர் சங்கம் கட்டுங்க, அது அதுக்கு மேல ஏர் போர்ட் கூட கட்டுங்க. ஆனால் அதுக்காக எங்ககிட்ட வந்து ஏழு கோடி கேட்கிறது சரியா?” என்கிறதாம் அந்த முக்கியமான சேனல். இந்த நிமிஷம் வரைக்கும் இழுபறி தொடர்கிறது.

Comments

comments