NTLRG_160224162649000000

ஹாலிவுட் படங்களின் சூப்பர் நேச்சுரல் கேரக்டர்களான பேட்மேனும், சூப்பர் மேனும் தனித்தனியே கலக்கி வந்தார்கள். உலகம் முழுவதும் பெரியோர் முதல் குழந்தைகள் வரை தங்கள் சாகசத்தால் கட்டிப்போட்ட இவர்கள் இருவரும் தற்போது பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் என்ற படத்தின் மூலம் இணைந்து கலக்க வருகிறார்கள்.

ஜாக் சிண்டர் இயக்கி உள்ள இந்தப் படத்தை டி.சி எண்டர்டெயின்மெண்ட், ரத்பக் எண்டர்டெயின்மெண்ட், அட்லஸ் எண்டர்டெயின்மெண்ட், குருவல் அண்ட் அன்யூசுவல் பிலிம்ஸ் என்ற நான்கு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. பென் அப்ளிக், ஹென்னி கெவில், எமி ஆடம்ஸ், ஜெஸி எலிம்ஸ்பர்க், டினா லான் நடித்துள்ளனர்.

வருகிற மார்ச் 19ந் தேதி வெளிவரும் இந்தப் படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் வெளியிடுகிறது. ஐமேக்ஸ் 3டி, சாதாரண 3டி, 2டி தொழில் நுட்பங்களில் வெளியிடுகிறது.

 

Comments

comments