1

இருக்கிற சேனல்லேயே பாதி பேருக்கு ஒழுங்கா சம்பளம் வர்றதில்ல. இதுல இவரு வேறயா? என்று சிலர் அலுத்துக் கொள்ளக் கூடும். அந்தளவுக்கு விபரம் இல்லாதவரா கவுதம்? இவர் தொடங்கவிருக்கும் இந்த சேனல் யூ ட்பில் மட்டும் வருமாம்! வரட்டும்… வரட்டும்… இதிலென்ன விசேஷம்? ஒவ்வொரு வாரமும் இவரே விஐபிகளை அழைத்து பேட்டியெடுப்பார். அதற்கு பெயர் காபி வித் கவுதம்!

தனது முதல் எபிசோட் மங்களகரமாக இருக்கட்டும் என்று நினைத்திருக்கலாம். ஆந்திராவிலிருக்கும் அனுஷ்காவுக்கு போன் அடித்தாராம். அடுத்த பிளைட்டை பிடித்து வந்துவிட்டார் அவர். ச்சும்மா அதிருதில்ல… என்கிற மாதிரி ஒரு இன்டர்வியூ வருகிறது அனுஷ்காவுடன். இதில் மீடியாவுக்கு சொல்லாத பல விஷயங்களை கவுதமுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறாராம் அனுஷ்கா. அதற்கப்புறம்?

தனுஷின் குட் புக்கில் இடம் பிடித்துவிட்டாரல்லவா தனுஷ்? அவரும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து இந்த காபி வித் கவுதம் பேட்டியில் கலக்கி விட்டாராம். பேச்சோடு பேச்சாக தனுஷுக்கு கவுதம் ஒரு கதை சொன்னதையும், அதில் நடிக்க தனுஷ் விரும்பியதையும் சொல்ல மாட்டோமே? ஏனென்றால், இப்படியெல்லாம் ஹீரோக்களை வளைத்துப் போடதான் கவுதம் இப்படியொரு சேனலை ஆரம்பித்தார் என்று வாய் கூசாமல் பேசுவீங்கல்ல?

Comments

comments