12672204_1040574992668181_8647564331771089435_o

எல்லாரோட காதலும் ஏதாவது ஒரு சினிமாவோட சின்க் ஆகும், அதே மாதிரி சினிமால வர்ற ஹீரோ, ஹீரோயின்கள் காதலர்/காதலி மாதிரியே தெரிவதும் இயற்கை தான். சினிமாவில் ஹிட் அடித்த ரியல் மற்றும் ரீல் ஜோடிகள் இதோ…

ஷாருக் – கஜோல்!

616139

‘குச் குச் ஹோத்தா ஹே’ என்ற ஒரு படத்திலேயே அனைவரது மனத்திலும் இடம் பிடித்து விட்டது இந்த ஜோடி! ‘மை நேம் ஈஸ் கான்’ படத்தில் உருக வைத்தும்  ‘கபி குஷி கபி கம் ‘ படத்தில் தம்பதியாக வந்து கலங்க வைத்தும் பாலிவுட்டில் தன கெமிஸ்ட்ரிக்கு நீங்கா இடத்தை தக்க வைத்துக்கொண்டார்கள் இவர்கள். இத்தனை வருடங்கள் பிறகும் எவ்வளவு வயதானாலும் ஷாருக் கஜோல் ஜோடிக்கு மவுசு குறையவில்லை. தில்வாலே படம் ஒ.கே ராகம் தான் என்றாலும் இந்த ஜோடியை பார்க்கவே பாக்ஸ் ஆபிஸை ஹிட் அடித்தவர்கள் அதிகம்!

ஸ்ரீதேவி – கமல்

kamal-haasan-and-sreedevi-in-pattabhishekam-1982

பதினாறு வயதினிலே வில் தொடங்கிய பயணம் அறுபது வயதிலும் கிண்ணென கிறங்கடிக்கிறது. இப்பவும் கமல் ஸ்ரீதேவி சேர்ந்து நடித்தால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும். மூன்றாம் பிறை, சிகப்பு ரோஜாக்கள், வாழ்வே மாயம் என இவர்களது ஜோடி ஹிட்டை வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம்.

ஆர்யா – நயன்தாரா

Arya-Nayanthara (1)

உங்களை எப்படி கரக்ட் பண்ணறதுன்னு நயன்தாராவிடமே ரவுசு காட்டும் இடத்திலும் சரி… உனக்கெல்லாம் கனிமொழி தேன்மொழின்னு எவளாவது கிடைப்பா. நான் செட் ஆகா மாட்டேன்னு நயன்தாரா  திட்டும்போதும் சரி… காதல் கிரந்கடிக்குதடா மொமென்ட். இரண்டே இரண்டு படங்கள் சேர்ந்து நடிச்சுருந்தாலும் இன்னும் ஒரு நாலு படம் ஒண்ணா பண்ண மாட்டாங்களான்னு எங்க வைக்கும் ஜோடி இது.

விஜய் – சிம்ரன்

priyam2

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் ரொம்ப எளிமையா பக்கத்துக்கு வீட்டு ஜோடி லுக் குடுத்த விஜய் – சிம்ரன், பிரியமானவளே படத்துல காதலால ஆடியன்ஸ் மனசை அப்படியே சாப்பிட்டிருப்பாங்க. என்னதான் சிம்ரன், விஜய் யை விட வயசுல மூத்தவங்களா இருந்தாலும்  இவங்கள ஸ்க்ரீன்ல பாக்கும்போது அப்படி தெரியாது. ‘விஜய் என்னை விட வயசுல  சின்னவர். அதனால நான் அவர் கூட நடிக்க மாட்டேன் ன்னு சிம்ரன் அறிவிச்சதா நியூஸ் வந்தாலும் இந்த ஜோடிக்கு தனி விசிறிகள் இருக்கத்தான் செய்யறாங்க.

 

ரியல் ஜோடி!
அபிஷேக் – ஐஸ்வர்யா

ash-abhi_story_650_080514055142

சல்மான் கான், விவேக் ஓபராய் என பல கிசிகிசுக்களுக்கு மத்தியில் தன்னை விட இரண்டு வயது இளையவரான அபிஷேக் பச்சனின் கரத்தை பற்றினார் ஐஸ்! குரு, குச் நா கஹோ, தூம் என ஸ்க்ரீனில் பல செஞ்சுரி ஸ்கோர் செய்ய, உலக அழகி ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுக்க, இனிதே நடக்கிறது இல்லறம்.

அஜித் – ஷாலினி

ajith-shalini

அமர்க்களம் படத்திலேயே ஜோடி அமர்க்களப்படுத்தியது. அதில் தெரியாத்தனமாக ஷாலினி கையில் ஒரு ரத்த காயம் வந்துவிட, துடிதுடித்து போனார் அஜித். காதல் பற்றிக்கொண்டது. நெக்ஸ்ட்? டும் டும் டும்தான். தல ரேஸ், டிரைவிங், சினிமா என கலக்கிக்கொண்டீருக்க, ஷாலினி பேட்மிடனில் பிச்சு உதற, அழகான குடும்பமாய் ஒரு மகள், ஒரு மகன்!

சிநேகா – பிரசன்னா

sneha prasanna

பலருடன் கிசுகிசுக்கப்பட்டாலும் புன்னகை அரசி சமர்த்து பையன் பிரசன்னாவின் வலையில் லாவக விழுந்துவிட்டார். அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் உருவான அயானிக் பாண்ட், கொஞ்சம் கொஞ்சமாக காதல் கெமிஸ்ட்ரியை வளர்த்து கொவேலன்ட் பாண்டாக நிற்கிறது. கோவாவில் சிறிய ரோலில் பிரசன்னா வந்தாலும் அந்த ஜோடி வெகுவாக ரசிக்கப்பட்டது.

சூர்யா – ஜோதிகா

surya

உயிரிலே கலந்து, பூவெல்லாம் கேட்டுப்பார், மாயாவி, பேரழகன், காக்க காக்க, ஜில்லுனு ஒரு காதல் என ஒரு லவ் எக்ஸ்ப்ரஸ்சையே ஓட்டி கோலிவுட்டில்  இன்றும் நிலையான ஹிட் ஜோடியாக ஆராதிக்கப்படுவது சூர்யா ஜோதிகா மட்டுமே! ஹீரோவா ஜீரோவா என இவர்கள் நடித்த விளம்பரப்படமே படு ஹிட் என்றால் வாழ்க்கை பற்றி கேக்கவா வேணும்? தியா , தேவ் என இரண்டு குழந்தைகளுடன் இவர்கள் காதல் எக்ஸ்ப்ரஸ் ஓடிக்கொண்டே இருக்கிறது! எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல்!

Comments

comments