001

குஷ்பு என்றால் குளிர்ச்சியாகி விடுகிற வழக்கம் கோடம்பாக்கத்திற்கு உண்டு. எல்லாருக்கும் நல்லவராய் நடமாடி வரும் அவர், சில விஷயங்களில் மட்டும்தான் பிடிவாதம். மற்ற நேரங்களில் தேவையில்லை கடிவாளம் என்கிற டைப் அவர். இந்த ஒரு காரணத்திற்காகவே அவரது அன்பையும் தைரியத்தையும் ஆராதித்து மகிழ்கிறது கோடம்பாக்கம். அவருக்கு ஒரு சங்கடம் என்றால், நாங்க இருக்கோம் என்று தோள்கொடுக்க, இன்று இதே ஏரியாவில் ஆயிரம் உள்ளங்கள். அதில் ஒரு உள்ளமாய் தன்னையும் என்ட்ரி போட்டுவிட்டார் விஜய் ஆன்ட்டனி. எப்படி?

ஒரு தனியார் தொலைக்காட்சி குஷ்புவை வைத்து ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சி நடத்தி வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதாலும், கோவை தொகுதியில் தானே காங்கிரஸ் வேட்பாளராக தேர்தலில் நிற்கப் போவதாலும் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு டெட் லைன் கொடுத்துவிட்டார் குஷ்பு. படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தாலும், நினைத்த நேரத்தில் முடிக்க முடியாத சூழ்நிலை. இந்த படப்பிடிப்புக்காக ஏ.வி.எம் ஸ்டூடியோவில் செட் போட்டிருந்தார்களாம். அந்த செட்டுக்கான கால அவகாசம் திடீரென முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு எபிசோடுகள் எடுக்க வேண்டிய நிலையில், உடனடியாக செட்டை பிரி என்றால் எப்படி?

கையை பிசைந்து கொண்டு நின்றாராம் குஷ்பு. வேறு ஒரு இடத்தில் செட் போட்டு நிகழ்ச்சியை எடுக்கலாம் என்றால் அதற்கு நேரம் இடம் தரவில்லை. பார்த்தார் குஷ்பு. செட்டை பிரிச்சுட்டு அதுக்கப்புறம் யாருக்கு இடத்தை வாடகைக்கு விடப் போறீங்க என்று கேட்டாராம். அந்தோ சந்தோஷம்… அந்த இடத்தில் வேறோரு செட் போட்டு படப்பிடிப்பை நடத்தவிருந்தார் திடீர் ஹீரோவும் தித்திக்கும் இசையமைப்பாருமான விஜய் ஆன்ட்டனி. விஷயம் தெரிந்ததும் நேரடியாக அவருக்கே போன் அடித்துவிட்டாராம் குஷ்பு.

‘‘இன்னும் இரண்டு நாள் எனக்கு அங்க வேலையிருக்கு. இடத்தை தர்றீங்களா?” என்று கேட்க, அவரும் “அதுக்கென்ன? ப்ளீஸ்” என்றாராம். காதும் காதும் வைத்த மாதிரி பிரச்சனை ஓவர். காங்கிரஸ் கலவரத்தையே கண்ணால பார்த்துட்டு தில்லா நின்னாச்சு. இதெல்லாம் ஒரு மேட்டரா? வாங்க வாங்க வருங்கால எம்.எல்.ஏ குங்பு மேம்.

Comments

comments