3c14766d-6969-485c-b0ba-469b90434633

பீப் சாங் புகழ் சிம்பு நடிக்கும் இது நம்ம ஆளு படத்தின் இசை உரிமை ஒன்றரை கோடிக்கு விற்கப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இப்படியொரு பச்சைப்பொய்யை பரப்பிவிட்டதே டி.ராஜேந்தர்ர்ர்ர்தான் என்பதை சொல்லத்தேவையில்லை.

இந்நிலையில், இது நம்ம ஆளு படத்தின் ஆடியோ வெளியான அன்று பிரஸ்மீட் நடத்தினார்.

இது நம்ம ஆளு படத்திற்கான பிரஸ்மீட் என்று பெயர்தான்….

அந்தப் படத்தின் இயக்குநர் பாண்டிராஜோ, அதில் நடித்தவர்களோ வரவில்லை.

குறளரசனை மட்டும் அழைத்து வந்து கும்மியடித்தார்.

டி.ராஜேந்தர்ர்ர் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பாண்டிராஜ், நயன்தாரா ஆகியோர் வரவில்லை என்று வைத்துக் கொண்டாலும்… படத்தின் நாயகனான சிம்பு ஏன் வரவில்லை?

பீப் சாங் விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார் சிம்பு.

வெளியே தலைகாட்டினால் நிச்சயமாக போலீஸ் தன்னை கைது செய்துவிடும் என்ற பயத்திலும் இருக்கிறார்.

இதே பயம் அவரது அப்பாவுக்கும் இருக்கிறதாம்.

அதனால் மகனை வீட்டில் பதுங்கி இருக்க செய்துவிட்டு, இது நம்ம ஆளு பிரஸ்மீட்டுக்கு வந்தார்.

பிரஸ்மீட்டில் சிம்பு வராதது பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பில் சிம்பு பிஸியாக இருப்பதாக பச்சைப்பொய்யை சொல்லி இருக்கிறார் டி.ராஜேந்தர்ர்ர்.

அன்றைக்கு அச்சம் என்பது மடமையடா படத்தின் படப்பிடிப்பே நடக்கவில்லை என்பதுதான் ஹைலைட்.

Comments

comments