maruthu-foundation-inauguration-Stills-003-740x431

விஷால் நடிக்கும் ‘மருது‘ என்ற திரைபடத்தின் படப்பிடிப்பு ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் நடந்து வருகிறது.

ராஜபாளையம் ஸ்ரீவல்லிப்புத்தூர் பகுதிகளில் சுகாதார முறையில் செப்டிக் டேங்க் வசதியுடன் வீடு தோறும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.

அரசின் மானியம் கிடைத்தாலும் கட்டுமான பணிக்கு அதற்கு மேல் செலவாகும் பணத்திற்கு வழியில்லாமல் ஊர் மக்கள் திகைப்பது விஷாலின் கவனத்திற்கு சென்றது.

அதனை தொடர்ந்து விஷால் தன் சக நடிகர்களான நடிகை ஸ்ரீதிவ்யா, நடிகர் சூரி ஆகியோருடன் அந்த பகுதியை பார்வையிட்டு பண உதவி தேவைப்படும் பத்து பேரை தேர்ந்தெடுத்து உதவி தொகையான ரூபாய் 80 ஆயிரத்தின் காசோலையை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி முன்னிலையில் சான்றோரிடம் வழங்கினார்.

அதனை தொடர்ந்து ஸ்ரீ திவ்யா , சூரி மற்றும் படக்குழுவினர்களும் தங்களது பங்கை அளித்தனர்.

விஷால் ஊர் மக்களுக்கு தன்வார்வதுடன் உதவி அளிக்க முன்வரவே ஊர் முக்கியஸ்தவர்களும் உதவி அளிக்க முன் வந்து அவர்கள் 200க்கும் மேற்பட்ட கழிவறை கட்டிக் கொடுக்க முன்வந்தனர்.

விஷால் இந்த பொது நல பணியில் ஈடுபடவே இந்த திட்டம் வெற்றி பெற பல இடங்களில் இருந்தும் உதவிகள் வந்த வண்ணம் உள்ளது என்றும் ராஜபாளையம் நகராட்சி வட்டாரங்கள் தெரியபடுத்தியது.

மேலும் ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் தனலட்சுமியின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் ஒருங்கிணைத்த ஊர் முக்கியஸ்தர்கள், சமுக சேவகர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு ஊக்கமளிதுள்ளளார் விஷால்.

கழிப்பறையை கட்டிக் கொடுத்ததையே சாதணைன்னு நினைச்சுக்கிட்டு கட்சி எதுவும் ஆரம்பிச்சிடாதீங்க விஷாலூ…

Comments

comments