001

4 கெட்டப்களில் கார்த்தி, 15 அரங்குகள், 60 கோடி பொருட்செலவு என மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘காஷ்மோரா’.

‘கொம்பன்’ படத்தைத் தொடர்ந்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘காஷ்மோரா’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து நாகார்ஜூனுடன் கார்த்தி நடிக்கும் ‘தோழா’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது தான் ‘காஷ்மோரா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

சுமார் 60 கோடி பொருட்செலவில் உருவாகி வரும் ‘காஷ்மோரா’, கார்த்தி நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், படத்தின் பிரதான காட்சிகள் அனைத்துமே சுமார் ஒன்றரை கோடி பொருட்செலவில் உருவான அரங்கில் தான் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தின் காட்சிகளை சுமார் 15 அரங்குகளில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படத்தில் சுமார் 4 கெட்டப்களில் நடித்திருக்கிறார் கார்த்தி. ஒவ்வொரு கெட்டப்பின் மேக்கப்பிற்கும் போட சுமார் 3 மணி நேரமும், படப்பிடிப்பு முடித்தவுடன் கலைப்பதற்கு 2 மணி நேரமும் ஆகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தான் முடிவடைய இருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments

comments