0c9a5800843a3450394d62af0c9c2996

‘காதலும் கடந்து போகும்’ படத்தில் இடம்பெறும் 3 நிமிட சண்டைக்காட்சியை ஒரே ஷாட்டில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி, மடோனா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. நலன் குமரசாமி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி.வி.குமார் மற்றும் ஞானவேல்ராஜா இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் 2 சண்டைக் காட்சிகள் இருக்கிறது. அதில் ஒரு சண்டைக் காட்சியை ஒரே ஷாட்டில் எடுத்திருக்கிறார்கள். இச்சண்டைக் காட்சியை ஹரி – தினேஷ் வடிவமைத்திருக்கிறார்கள்.

அக்காட்சியில் விஜய் சேதுபதி தனது நண்பருடன் ஒரு கட்டிடத்திற்கு சென்று அங்கிருந்தவர்களுடன் சண்டை இட்டுவிட்டு, கட்டிடத்தை விட்டு வெளியே வந்து விஜய் சேதுபதி தெருவில் நடந்து செல்வது வரை ஒரே ஷாட்டில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இச்சண்டைக்காட்சி படத்தில் சுமார் 3 நிமிடங்கள் வரவிருக்கிறது. இக்காட்சி படப்பிடிப்பில் 3வது டேக்கில் தான் சரியாக அமைந்திருக்கிறது.

விரைவில் சென்சார் பணிகளை முடித்து, படத்தை பிப்ரவரி 12ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

Comments

comments