0

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கபாலி’. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரத்துடன் மலேசியாவில் நிறைவுற்றது. குறுகிய காலத்தில் இந்தப் படத்தில் தனி கவனம் செலுத்தி ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்துள்ளார். படத்தின் முதல் பார்வை வெளியான நாளிலிருந்தே எதிர்பார்ப்பை சந்தித்து வரும் படம் ‘கபாலி’.

படம் ஆரம்பமான நாளிலிருந்தே ரஜினிகாந்தின் கொஞ்சம் வயதான தோற்றத்தில் ஸ்டைலான தோற்றத்தில் ‘லீக்’ அன பல புகைப்படங்கள் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தன. இந்தப் படத்தில் நிச்சயம் வித்தியாசமான ரஜினிகாந்தைப் பார்க்கப் போகிறோம் என ரஜினி ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

படப்பிடிப்பு  இரு தினங்களுக்கு முன்பு  முடிவடைந்ததையடுத்து படத்தின் டீசர் எப்போது வரும் என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது கிடைத்துள்ள தகவலின் படி படத்தின் டீசரை மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். சரியான தேதியை படத்தின் தயாரிப்பாளர் தாணு விரைவில் அறிவிப்பார் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

 

Comments

comments