0

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலத்தை வென்ற கலைஞன். அவரது வாரிசுகள் யாரும் அரசியலுக்கும் வரவில்லை. சினிமாவுக்கும் வரவில்லை. பல வருடங்களுக்கு பிறகு எம்.ஜி.ஆரின் அண்ணன் சாரங்பாணியின் பேரன் ராமச்சந்திரன், ‘கபாலி தோட்டம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். அனிஷா என்ற புதுமுகம் ஹீரோயின், விக்கி என்ற இன்னொரு ஹீரோவும் நடிக்கிறார். கோலிசோடா மதுசூதனன் வில்லனாக நடிக்கிறார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி பிக்சர்ஸ் மற்றும் ட்ரான்ஸ் லிங் மீடியா இணைந்து தயாரிக்கிறது. யு.கே.முரளி இசை அமைக்கிறார்.

“தீயை தீயிட வரும் ஒரு இளைனின் கதை. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதை. படப்பிடிப்புகள் அனைத்தும் சென்னையிலேயே ஒரே ஷெட்யூலில் படமாகிறது. கபாலி தோட்டம் என்ற தலைப்பு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தை மனதில் வைத்து வைக்கப்படவில்லை. கதைக்கு தேவையான தலைப்பு என்பதால் வைத்திருக்கிறோம்” என்கிறார் இயக்குனர் டி.ஆர்.பாஸ்கர்.

 

Comments

comments