001

சமீபத்தில் டுவிட்டரில் இணைந்த கமல் சுதந்திரம் பற்றி தன்னிடம் கேள்வி கேட்கலாம். அதற்கு பதில் சொல்வதாக கூறியிருந்தார். தற்போது சுதந்திரம் பற்றி நீண்ட பதில் அளித்துள்ளார். அதில் “எனக்கு இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை” என்று கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது… உலகின் பிற நாடுகளை ஒப்பிடும் போது எந்த ஓர் இந்திய திரைப்பட படைப்பாளிக்கும் முழு பேச்சு சுதந்திரம் இல்லை என்பதே யதார்த்த உண்மை. எனவே எனக்கும் படங்கள் எடுப்பதில் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை நான் புகாராகவே முன் வைக்கிறேன். நான் இன்னும் எனது முழு சுதந்திரத்தை அடையவில்லை. சுதந்திரம் என்பது லஷ்மணன் கோடு போல் வரம்புடன் வர வேண்டும். சுதந்திரம் என்பது மாறாதது, நிலையானது. சுதந்திரம் என்பது நம் உடல் போன்றது, அதனை நாம் ஊட்டிவளர்க்க வேண்டும், காக்க வேண்டும். இவ்வாறு கமல் தெரிவித்திருக்கிறார்.

Comments

comments