3c14766d-6969-485c-b0ba-469b90434633

விக்ரம்பிரபு கீர்த்திசுரேஷ் நடித்த “இது என்ன மாயம்” படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் இயக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

அந்தப்படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இதுவரை தமிழில் மட்டுமே படங்களை இயக்கிய இயக்கிய இயக்குநர் விஜய் இந்தப்படத்தை, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இயக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிரபல வில்லன் நடிகர் சோனுசூத்  முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மனுஷ் நந்தன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பிரபு தேவா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் முனைவர் கே.கணேஷ் மற்றும் மும்பையை சேர்ந்த பாப் கார்ன் எண்டர்டைன்மெண்ட் ஆகியோர் இணைந்து  தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகச் சொல்கிறார்கள். மற்ற நடிக நடிகையர் மற்றும்  தொழில்நுட்பக் கலைஞர்கள்  தேர்வு நடந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Comments

comments