001

சிம்பு நடித்த படங்களில் வெற்றிப்படங்களை விரல்விட்டு அல்ல விரல்விடாமலே எண்ணிவிடலாம்.

அந்தளவுக்கு அவரது கேரியரில் ஓடிய படங்களைவிட ஓடாத படங்களே அதிகம்.

அதுமட்டுமல்ல, அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களும் அந்தப்படத்தோடு திரையுலகைவிட்டே காணாமல்போன கதையும் கடந்த காலத்தில் நடந்தேறி இருக்கிறது.

சிம்புவை வைத்து மன்மதன் என்ற படம் எடுத்த ஒரே பாவத்தை செய்ததற்காக கிருஷ்ணகாந்த் என்ற தயாரிப்பாளர் இன்னமும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சிம்பு நடித்த தோல்விப்படங்களில் ஒன்றுதான் காளை என்ற படம்.

திமிரு என்ற வெற்றிப்படத்தை இயக்கிய தருண் கோபி இயக்கிய இந்தப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்தார்.

அதன் பிறகு சிம்பு ஜி.வி.பிரகாஷ்குமார் இருவரும் இணையவில்லை.

பல வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

இந்த ஆதிக் ரவிச்சந்திரன் ரவிசந்திரன் யார் தெரியுமோ?

ஜி.வி.பிரகாஷ்குமார், ஆனந்தி நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற பலான படத்தை இயக்கியவர்.

அந்தப் படத்தைப்போலவே பலான சமாச்சாரங்கள் நிறைந்த ஒரு ஆபாசக் கதையை பீப் சாங்கின்ள பிதாமகன் சிம்புவிடம் சொல்லியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன் .

இப்படிப்பட்ட விஷயங்களில் ருசி கண்ட சிம்பு உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

ஆதிக் ரவிச்சந்திரன் – சிம்பு என்ற இரண்டு ஆபாச வியாபாரிகள் இணையும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே 1ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

இந்தப் படத்தை ரெபில் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தீபன் பூபதி என்ற புதிய தயாரிப்பாளர் தயாரிக்க இருக்கிறாராம்.

இந்தப் படத்தில் 3 கெட்டப்களில் நடிக்கவிருக்கிறார் சிம்பு.

அவருக்கு ஜோடியாக 3 கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்களாம்.

நாகூர் பிரியாணி….. உளுந்தூர்பேட்டை தெரு நாய் உதாரணம்தான் ஞாபகத்துக்கு வருது….

Comments

comments