NTLRG_160221095922000000

மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமானவர் கெளதம். நடிகர் கார்த்திக்கின் மகனான இவர், தற்போது ராஜதுரை இயக்கும் முத்துராமலிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 20 நாட்களாக நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியில் நடந்து வந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் தொடங்குகிறது.

இந்த படம் குறித்து இயக்குனர் ராஜதுரை கூறுகையில், முத்துராமலிங்கம் படம் நெல்லை மண்வாசனை கதையில் உருவாகிறது. படத்தில் நடிக்கும் அனைத்து கேரக்டர்களுமே நெல்லை தமிழில் பேசி நடிக்கிறார்கள். அம்மா-மகன் செண்டிமென்ட் கதையில் உருவாகும் இந்த படத்தில் கெளதமின் தந்தை கார்த்திக்கே அவருக்கு அப்பாவாக நடிக்கிறார். சுகன்யா அவரது அம்மாவாக நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, சுமன், பிரியாஆனந்த், ராதாரவி, விவேக், சிங்கம் புலி, ரேகா உள்பட பலர் நடிக்கின்றனர். முக்கியமாக இந்த படத்தில் 15 காமெடியன்கள் நடிக்கிறார்கள்.

மேலும், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைப்பது படத்துக்கு பெரிய ப்ளசாகியிருக்கிறது. அதோடு கமல்ஹாசன் இந்த படத்துக்காக பாடியிருப்பதையும் பெருமையாக கருதுகிறேன். செண்டிமென்ட் மட்டுமின்றி காதல், காமெடி, ஆக்சன் என பல அம்சங்களும் கலந்து இந்த படம் உருவாகிறது. ஜூன் மாதம் முத்துராமலிங்கம் படத்தை வெளியிட முடிவு திட்டமிடப்பட்டுள்ளது என்கிறார் இயக்குனர் ராஜதுரை.

Comments

comments