1

2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ்நாராயணன். தொடர்ந்து பிட்சா, சூதுகவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், 36வயதினிலே என்று வரிசையாக வெற்றிப்படங்களில் அவர் இருந்தார்.

அதன்விளைவு 2016 இல் அவருக்குப் பத்துப்படங்கள் இருக்கின்றன. எல்லாமே கவனிக்கத்தக்க படங்கள். மாதவன் நடித்த இறுதிச்சுற்று படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இன்றே இப்படத்தின் இந்திப்பதிப்பான சால கதூஸ் படமும் வெளியாகியிருக்கிறது.

இவற்றையடுத்து, கார்த்திக்சுப்புராஜின் இறைவி, உதயநிதியின் மனிதன், நலன்குமாரசாமியின் காதலும்கடந்துபோகும், கார்த்தி நடிக்கும் கஷ்மோரா, ரஜினியின் கபாலி, தனுஷின் கொடி, சந்தானம் நடிக்கும் சர்வர்சுந்தரம், செல்வராகவனின் நெஞ்சம்மறப்பதில்லை மற்றும் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதியபடம் ஆகிய படங்களுக்கு அவர்தான் இசையமைக்கிறார்.

இவற்றில் சில படங்கள் இப்போதே வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டன. எல்லாப்படங்களும் இவ்வாண்டுககுள் வெளியாகவிடும் என்று சொல்லப்படுகிறது. ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணிநடிகர்கள் படங்கள் மட்டுமின்றி செல்வராகவன், கார்த்திக்சுப்புராஜ் போன்ற முன்னணிஇயக்குநர்களின் படங்களிலும் அவர் இருப்பதால் இந்தஆண்டு அவருக்கு பெரிய திருப்பமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Comments

comments