001

கடந்த பொங்கல்நாளில் பாலா இயக்கத்தில் தாரைதப்பட்டை, விஷால் நடிப்பில் கதகளி, உதயநிதி நடித்த கெத்து ஆகிய படங்களோடு சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படமும் வெளியானது.

இந்நான்கு படங்களில் விமர்சனரீதியாகவும் வசூலிலும் ரஜினிமுருகன் படம் முன்னிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  ஐந்தாண்டுகளுக்கு முன்பாக அதாவது 2011 ஆம் ஆண்டு, பாலா இயக்கத்தில் விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்த அவன்இவன் படம் வெளியானது. அந்தப்பட வெளியீட்டின்போது விஜய் தொலைக்காட்சியில் பாலா, விஷால், ஆர்யா ஆகியேர் கலந்துகொண்ட நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் சிவகார்த்திகேயன்.

நிகழ்ச்சித்தொகுப்பாளராக மிக இயல்பாகப் பேசக்கூடிய சிவகார்த்திகேயன், பாலாவிடம் கேட்கவேண்டிய கேள்விகளையே மிகவும் தயங்கித்தயங்கித்தான் கேட்டார். இவர் பாலாவிடம் கேள்விகள் கேட்பதை வாய்கொள்ளாச் சிரிப்போடு விஷாலும் ஆர்யாவும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஐந்தாண்டுகள் கழித்துப் பார்த்தால் அதே பாலா இயக்கியபடம், விஷால் நடித்த படம் ஆகியனவற்றோடு வெளியாகி வெற்றியும் பெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

CZK_JTwUAAET95V

கடினஉழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தால் விரைவில் வெற்றி சாத்தியமாகும் என்கிற வாசகங்களோடு இணையவெளிகளில் இந்தச் செய்தி பகிரப்பட்டு வருகிறது.

Comments

comments