001

ந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.ஓ படத்தின் ஷூட்டிங்குக்காக பொலிவியா செல்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் இந்த நாட்டில்தான் படமாகின்றன.

கபாலி படத்தில் நடித்து வரும் ரஜினி, அத்துடன் ஷங்கர் இயக்கும் பிரமாண்ட 2.ஓ படத்திலும் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் அவர் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள் பொலிவியா நாட்டில் படமாக்கப்பட உள்ளன.

a-x-testo-3-tagliare

தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்று பொலிவியா. இதற்கு முன் ரஜினி நடித்த மெகா ஹிட் படமான எந்திரனின் இரண்டு பாடல் காட்சிகள் இதே தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க மாச்சு பிச்சு மற்றும் நீர்ப் பாலைவனப் பகுதிகளில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

travel-blog-bolivia-4

பெருவைப் போலவே பொலிவியாவிலும் இதுவரை இந்திய சினிமாக்காரர்கள் பார்த்திராத பிரமாதமான லொகேஷன்கள் உள்ளதால் இங்கு செல்கிறார்கள் ரஜினி – ஷங்கர் குழுவினர்.

Comments

comments