IMG-20160129-WA0015

இராணிய மற்றும் பிரெஞ்சுப்பட பெண் இயக்குநரான மர்ஜோன் சட்ராபியின் இயக்கத்தில் உருவாகும் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் ஹு காட் டிராப்டு இன் தி கியா கப்போர்டு’ (The Extraordinary Journey Of the Fakir Who Got Trapped In The Ikea Cupboard) என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.

தன்னுடைய ஹாலிவுட் பிரவேசம் பற்றி ட்விட்டரில் நேற்று தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் தனுஷ்.

ஹாலிவுட் படத்தில் நடிப்பது குறித்து தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக தனுஷ் ட்வீட்டிய உடனே, நடிகர் சித்தார்த் ஒரு ட்வீட் பண்ணினார்.

அந்த ட்வீட் என்ன தெரியுமா?

“நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் இருக்கிற ஒரு தெருநாய்க்குக் கிடைக்கணுமுன்னு எழுதி இருந்தால் அதை யாராலும் மாத்த முடியாது..”

தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் சந்தானம் பேசிய இந்த வசனத்தை இப்போது எதற்காக சித்தார்த் சொல்ல வேண்டும்?

சித்தார்த்தின் இந்த கருத்து தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிப்பது குறித்து சொல்லப்பட்டதா…

அல்லது வேறு காரணத்துக்காக சொல்லப்பட்டதா என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும்…

தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிப்பது குறித்தே உளுந்தூர்பேட்டை தெரு நாய் உதாரணம் சொல்லி சித்தார்த் நக்கல் அடித்திருப்பதாக சொல்கின்றனர் திரையுலகினர்.

dhanush-siddhu-tweet-740x431
தனுஷ் ட்வீட் பண்ணிய அடுத்த இரண்டாவது நிமிடத்தில் சித்தார்த் ட்வீட் பண்ணியிருப்பதால், அது தனுஷ் குறித்த கமெண்ட்தான் என்று லாஜிக் சொல்கின்றனர்.

ஆமாம்.. இருவருக்கும் என்ன பஞ்சாயத்து?

சித்தார்த்தும் சமந்தாவும் காதலர்களாக இருந்ததும்…..

காளகஸ்தி கோவிலுக்குப் குடும்பத்தோடு போய் தோஷம் கழித்துவிட்டு வந்ததும்….

இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்ததும்….

பிறகு திடீரென இருவரும் பிரிந்ததும்…

கடந்த கால ப்ளாஷ்பேக்கின் சுருக்கம்.

சமந்தா தன்னைவிட்டு பிரிந்ததற்கு தனுஷ் உடன் ஏற்பட்ட ‘உறவும்’ ஒரு காரணம் என்று நினைத்திருக்கிறார் சித்தார்த்.

அதன் தொடர்ச்சியாகவே தங்கமகன் படத்தில் சமந்தாவை ஜோடியாக்கினார் தனுஷ்.

அடுத்தப் படத்திலும் சமந்தா உடன் ஜோடி போடுகிறார் தனுஷ்.

காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொத்திக் கொண்டு போன கதையாக….

உருகி உருகி காதலித்த சமந்தாவை தனுஷ் தட்டிக்கொண்டுபோய்விட்ட கோபம்தான் இப்போது உளுந்தூர்பேட்டை தெரு நாய் உதாரணமாக சித்தார்த்திடமிருந்து வெளிப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

நட்சத்திரங்களின் காதல் கதைகள் தமிழ்சினிமா காதலைவிட திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கிறதே?

Comments

comments