NTLRG_160104114430000000

தமிழில், ஈட்டி, பூலோகம் படங்கள் விளையாட்டை மையமாக வைத்து உருவானதைப்போன்று ஹாலிவுட்டில் உருவாகி உள்ள படம் கன்சியூசன். கடந்த கிறிஸ்துமஸ் அன்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வெளிவந்து வசூலை குவித்து வருகிறது. வில் ஸ்மித், அலிக் பல்ட்வின் நடித்துள்ளனர். பீட்டர் லேண்டஸ்மேன் இயக்கி உள்ளார்.

கால்பந்து விளையாடும் வீரர்கள் பந்தை தலையால் மோதுவதால் அவர்களை சிடிஇ என்ற நோய் தாக்குகிறது. மூளை நரம்புகள் பாதிக்கப்படுவதால் அவர்கள் மனநோயாளிகளாவோ அல்லது வேறு விதமான பிரச்னைகளிலோ சிக்கிக் கொள்கிறார்கள். இந்த நோயை கண்டுபிடித்தவர் நைஜீரியாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணரான டாக்டர் பென்னட் ஓமாலு.

அவரின் இந்த கண்டுபிடிப்பை வெளியிட விடாமல் அமெரிக்க தேசிய கால்பந்து கழகம் பல சதிவேலைகளை செய்தது. இது வெளிவந்தால் கால்பந்து விளையாட்டுக்கு உலகம் முழுவதும் உள்ள மவுசு குறைந்து அதன் மூலம் புரளும் பல லட்சம் கோடி ரூபாய் வியாபாரங்கள் முடங்கும் என்பதால் அதை தடுக்க நினைக்கிறார்கள், இந்த பிரச்னையை மையமாக வைத்துதான் படம் உருவாகி இருக்கிறது. பென்னட் ஓமலுவாக வில்ஸ்மித் நடித்திருக்கிறார். கடும் விமர்சனங்களோடு வசூலையும் குவித்து வரும் இந்தப் படத்தை கொலம்பியா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இந்தியாவில் பிப்ரவரி 5ந் தேதி வெளிவருகிறது.

 

Comments

comments