CZzMT-iUYAAKPd2

காலத்தால் அழிக்க முடியாத படங்களின் பெயர்களை தற்போது மீண்டும் சூட்டி அப்படங்களின் பெருமையைக்குலைக்கும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது.

பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள் படத்தின் பெயரை தற்போது ஒரு படத்துக்கு சூட்டியுள்ளனர்.

அந்த அதிர்ச்சி மறைவதற்குள் காலத்தால் அழியாத படைப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் பெயரை தற்போது செல்வராகவன் இயக்கும் படத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.

1963ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பெயரில் உருவானாலும் இப்படம் அதன் ரீமேக் இல்லை.

செல்வராகவன் கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியிருக்கும், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா , ரெஜினா கசான்றா , நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணா , இசை சந்தோஷ் நாராயணன் , இவர் செல்வராகவனுடன் முதன் முறையாக இணைந்துள்ளார்.

கலை விஜய் ஆதிநாதன் , இணை தயாரிப்பு ஜேம்ஸ் , தயாரிப்பு க்லோ ஸ்டுடியோஸ் ப்ரோடெக்ஷன்.

இப்படத்தின் படபிடிப்பு இன்று காலை திருவான்மியூரில் ஒரு பங்களாவில் துவங்கியது.

இன்று துவங்கிய படபிடிப்பை தொடர்ந்து மார்ச் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கிவரும் நெஞ்சம் மறப்பத்தில்லை முற்றிலும் புது பாணியில் இருக்குமாம்.

“நெஞ்சம் மறப்பதில்லை” படத்தி ன் மூலம் கெளதம் வாசுதேவ் மேனன் , செல்வராகவன் , எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி. மதன் மூவரும் இணைகின்றனர்.

Nenjam-Marappathillai-740x431

Comments

comments