001

அஜித் தும்மினால் கூட அது சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் தான் போல. அந்த வகையில் நேற்று இவர் பாஸ்போர்ட் ஆபிஸிற்கு வந்தார்.

இதை அறிந்த ரசிகர்கள் உடனே எல்லோரும் அங்கு கூட, கிட்டத்தட்ட 1000 கணக்கானோர் வந்தனர். ஏதோ அஜித் படம் முதல் நாள் ரிலிஸ் போல் ஆகிவிட்டது அந்த இடம்.

அதில் கூடுதல் ஸ்பெஷலாக  குட்டிதலயும் வர, ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகமாகியது. தன் பணிகளை முடிந்த அஜித் வெளியே வருகையில் ரசிகர்கள் பலரும் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

பின் அரசாங்க வண்டியில் அஜித்தை அழைத்து சென்றனர், அஜித் சென்ற சில மணி நேரம் கழித்து ஷாலினி கிளம்பினார்.

பலரும் தங்கள் சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டனர், குறிப்பாக குட்டிதலயை பார்த்தது மிகவும் சந்தோஷம் என கூறினர்.

Comments

comments