udhay-tweet-740x431

பாராட்டி எழுதும்போது மீடியாக்களை துதிப்பதும், தவறுகளை சுட்டிக்காட்டி எழுதும்போது மீடியாக்களை மிதிப்பதும் சினிமாக்காரர்களுக்கு கைவந்த கலை.
இந்த பட்டியலில் உதயநிதியும் சேர்ந்துவிட்டார்.கருணாநிதியின் பேரன் என்ற விசிட்டிங் கார்டை வைத்துக் கொண்டு திரைத்துறைக்குள் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்தவர் உதயநிதி ஸ்டாலின்.
சில வருடங்களிலேயே அவருக்கு கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசை வந்தது.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவானார்.

உதயநிதியின் முகத்தை போஸ்டரில் பார்த்துவிட்டு ஒரு கல் ஒரு கண்ணாடி படம் திரையிடப்பட்ட தியேட்டர் பக்கம் ஒருத்தரும் ஒதுங்கக் கூட இல்லை.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை மீடியாக்கள் பாராட்டி எழுதித்தள்ளின.

அதன் பிறகே ஓகே ஓகே படத்தைப் பார்க்க மக்கள் தியேட்டரை நோக்கி திரண்டனர்.

மீடியாக்களின் புண்ணியத்தில்தான் உதயநிதி ஹீரோ அவதாரம் எடுத்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

அந்தப் படத்துக்குப் பிறகு இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா என இரண்டு படங்களில் நடித்தார் உதயநிதி.

இரண்டுமே மொக்கப்படங்கள்தான் என்றாலும், அப்படங்களை மீடியாக்கள் தட்டிக் கொடுக்கவே செய்தன.

உதயநிதி நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள அவரது லேட்டஸ்ட் படமான கெத்துவோ வெத்து படம்.

பொங்கலுக்கு வெளியான நான்கு படங்களில் தாரை தப்பட்டை கெத்து படங்களுக்கு இடையில்தான் கடும்போட்டி. முதல் இடத்துக்காக அல்ல, கடைசி இடம் எந்தப் படத்துக்கு என்பதில்தான்.

அமெச்சூரான ஆக்ஷன் த்ரில்லர் எப்படி இருக்கும் என்பதற்கு கெத்து படம்தான் உதாரணம்.

எனவே கெத்து படத்துக்கு மீடியாக்களிடமிருந்து பாசிட்டிவ்வாக விமர்சனம் வரவில்லை.

தான் நடித்த கெத்து படத்தை மீடியாக்கள் பதம் பார்த்ததை உதயநிதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உக்கிரநிதியாகிவிட்டார்.

“நான் விமர்சகர்களுக்காக படம் எடுக்கவில்லை, ரசிகர்களுக்காகத்தான் படம் எடுக்கிறேன்.” என்று ட்விட்டரில் கொந்தளிக்க ஆரம்பித்தார் உதயநிதி.

அடுத்தகட்டமாக,“ பணம் வாங்கிக் கொண்டு விமர்சிக்கும் டுபாக்கூர் விமர்சகர்கள் முகத்தில் விடப்படும் குத்துதான் ‘கெத்து’ படத்தில் பாரில் நடைபெறும் சண்டைக் காட்சியின் முதல் குத்து.” என்று எல்லை மீறி ட்வீட்டினார்.

அப்படியும் அவரது ஆத்திரம் அடங்கவில்லை போலிருக்கிறது.

“பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்பவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை.”
என்று ட்வீட் பண்ணினார்.

உதயநிதியின் ட்வீட் பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கோபத்தைக் கிளறியது.

பாராட்டி எழுதும்போது பல்லைக்காட்டி நிற்பதும், குறை சொல்லும்போது விமர்சனம் செய்பவர்கள் மீதே குற்றம் சாட்டுவதும்…. என்ன புத்தி இது? என்று உதயநிதி மீது பத்திரிகையாளர்களின் கோபம் திரும்பிய நேரத்தில்…

“‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் வெளிவந்த அன்று அந்தப் படத்தைப் பற்றி மோசமாக எழுதியிருந்தார் ஒரு விமர்சகர். ஆனால், அந்தப் படம் மாபெரும் வெற்றி என்று அறிவிக்கப்பட்டதும், அவருடைய விமர்சனத்தை நீக்கிவிட்டார்.” என யாரையோ ‘குறிப்பிட்டு’த் தாக்கியிருந்தார் உதயநிதி.

அதன் பிறகே உதயநிதியின் கோபம் யார் மீது என்று பத்திரிகையாளர்களுக்கு தெரிய வந்தது. அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவரும் இதை உறுதிபடுத்தினார்.

உதயநிதி குறிப்பிட்டது பத்திரிகையாளர்களை அல்லவாம், ட்விட்டரை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட சிலரையே குட்டியிருக்கிறார் உதயநிதி.

ட்விட்டரில் சில ஆயிரம் ஃபாலோயர்களை வைத்திருக்கும் சில டுபாக்கூர் பார்ட்டிகள், “ நான் எழுதுவதைப் படிக்க இத்தனை ஆயிரம் பேர் ட்விட்டரில் என்னை ஃபாலோ பண்ணுகிறார்கள்” என்று சொல்லி சினிமாக்காரர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கறப்பதை பிழைப்பாகவே வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் எல்லாம் யார்?

இவர்களது பின்னணி என்ன?

இவர்களுக்கும் சினிமாவுக்கும் என்ன சம்மந்தம்?

என்பதை பற்றி எல்லாம் தெரியாமலே பல தயாரிப்பாளர்கள் இந்த ட்விட்டர் டுபாக்கூர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஆட்கள்தான் உதயநிதி பணம் தர வில்லை என்ற கோபத்தில் கெத்து படத்தைப் பற்றி தொடர்ந்து நெகட்டிவ்வான செய்திகளை ட்விட்டரில் பரப்பி இருக்கிறார்கள்.

அதுதான் உதயநிதியை உக்கிரநிதியாக்கிவிட்டதாம்.

அதற்காக, ட்விட்டர் என்கிற சமூகவலைத்தளத்தை தவறாகப் பயன்படுத்தி பணம் பறிக்கும் தீய சக்திகளையும் விமர்சகர்கள் என்று குறிப்பிடலாமா உதயநிதி?

பத்திரிகைத் துறையில் பல வருட அனுபவம் வாய்ந்த விமர்சகர்கள் வேறு; ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களை வைத்துக் கொண்டு ஏய்த்து பிழைப்பவர்கள் வேறு.

இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்.

Comments

comments