04-1441344794-arvind-swamy677

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பாசறையில் இருந்து வந்தவர் அட்லி. அவர் இயக்கிய முதல் படமான ராஜாராணி மெகா ஹிட்டானது. அந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் ஆகியோரை இயக்கிய அட்லி, தனது இரண்டாவது படத்தில் கண்டிப்பாக விஜய்தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். காரணம், ஷங்கரின் நண்பன் படத்தில் விஜய் நடித்து வந்தபோது அப்படத்தில் உதவி இயக்குனராக ஒர்க் பண்ணிய அட்லி, அப்போதே விஜய்யிடம் தெறி கதையை சொல்லி ஓகே பண்ணி வைத்திருந்தாராம்.

அதனால்தான் விஜய் உடனடியாக கால்சீட் தரமுடியாது என்று சொன்னபோதும் வருடக்கணக்கில் காத்திருந்து தெறி படப்பிடிப்பை தொடங்கிய அட்லி இப்போது இறுதிகட்டத்தில் இருக்கிறார். அதோடு, தான் ஷங்கரின் உதவியாளர் என்பதை நிரூபிக்கும் வகையில் சில காட்சிகளில் விஜய்யே எதிர்பார்க்காத பிரமாண்டங்களை காண்பித்து அவரை அசத்தி விட்டாராம். குறிப்பாக, சில கிரேன் ஷாட்களில் அவர் எடுத்த ஷாட்களை விஜய்யை வெகுவாக கவர்ந்துள்ள தாம். அதனால் படத்தில் கதை மட்டுமின்றி மேக்கிங்கும் சூப்பராக இருப்பதாக தனது நட்பு வட்டாரங்களில் தெறி படத்தைப்பற்றி கூறி வரும் விஜய், மீண்டும் இன்னொரு படத்திலும் சீக்கிரமே நாம் இணைவோம் என்றும் அட்லிக்கு இனிப்பு செய்தி கூறியிருக்கிறாராம்.

Comments

comments