rajini-murugan-stills-9-740x431 (1)

திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா சார்பில் இயக்குநர் என் .லிங்குசாமி தயாரிக்க, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்- கீர்த்தி சுரேஷ் நடித்த படம் – ரஜினி முருகன்.

கடந்த வருடமே வெளியாகி இருக்க வேண்டிய இப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு பொங்கல் அன்று திரைக்க வரவிருக்கிறது.

ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ரஜினி முருகன் படத்துக்கு தமிழகமெங்கும் முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே பல தியேட்டர்களில் ஹவுஸ்புல்.

இன்னொரு பக்கம் நாளிதழ்கள் தொடங்கி நாலா பக்கமும் ரஜினி முருகன் பட விளம்பரங்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

இத்தனைக்குப் பிறகும் ரஜினி முருகன் படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று திரையுலகில் சிலர் சூடம் கொளுத்தி சத்தியம் செய்து வருகின்றனர்.

இவ்விஷயம் லிங்குசாமிக்கு சென்றடைந்திருக்க வேண்டும்.

எனவே, புரளிகளை பொய்யாக்கி, தடைகளை தகர்த்தெறிந்து ரஜினி முருகன் வருகிற ஜனவரி 14 தேதி மிக பிரம்மான்டமான வெளியீடாக உலகமெங்கும் 800 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உறுதியாக வெளியாகிறது என்ற தகவலை ஊடகங்களுக்கு நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்….

பொங்கல் அன்று ரஜினி முருகன் படம் ரிலீஸ் ஆவது உறுதி… உறுதி… உறுதி…

Comments

comments