NTLRG_160118150850000000

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 99வது பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் நாடு முழுவதும் அவரது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளும் அ.தி.மு.க தொண்டர்களும் வீதிகள் தோறும் எம்.ஜி.ஆரின் படங்களை வைத்து அவரது பாடல்களை ஒலிபரப்பி அவர்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து கொண்டாடினார்கள். 100க்கும் மேற்பட்ட படத்தில் நடித்து 25 ஆண்டுகள் தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்.ஜி.ஆரை திரையுலம் மட்டும் மறந்து விடும்.

முன்பிருந்த நடிகர் சங்கத்தில் ஒரு பெரிய எம்.ஜி.ஆர் படம் இருந்தது. காரணம் அவரும் நடிகர் சங்கத் தலைவராக இருந்தார் என்பதால். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவரது படத்துக்கு மாலை அணிவிப்பதோடு நடிகர் சங்கத்தின் பணிகள் முடிந்து விடும். அதையும் அங்கு வேலை பார்ப்பவர்களை அணிவித்து விடுவார்கள். முதன் முறையாக அவரது 99வது பிறந்த நாளினை நடிகர் சங்கத்தினர் கவுரமாக கொண்டாடினார்கள்.

நடிகர் சங்கம் இருந்த இடம் பொட்டல் காடாக இருந்த போதும் எம்.ஜி.ஆரின் உருவ படத்தை அங்கு எடுத்து வைத்து மாலை அணிவித்து அலங்கரித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் கூடி எம்.ஜி.ஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.பின்னர் அங்கேயே சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது.

Comments

comments