CZbNupmUYAAsulw

தமிழில் சிம்பு நடித்த ‘அலை’, மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’ படங்களை இயக்கிய விக்ரம் குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கியுள்ள படம் ’24’. சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடிக்கம் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஒரு ‘சயின்ஸ் ஃபிக்ஷன்’ படமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வை கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் அசத்தலான டிசைனில் இரு தோற்றங்களில் சூர்யா அந்த டிசைன்களில் இடம் பெற்றிருந்தார்.

அதற்கடுத்து புத்தாண்டை முன்னிட்டு படத்தின் இரண்டாவது பார்வையாக மேலும் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டார்கள். அவற்றில் காதல் நாயகனாக ரொமான்டிக் லுக்குடன் இருந்தார் சூர்யா. இன்று ’24’ படத்தின் மூன்றாவது போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்கள். இதில் வயதான தோற்றத்தில் யார் என்றே புரிந்து கொள்ள முடியாத கொஞ்சம் விகாரமான தோற்றத்தில் இருக்கிறார் சூர்யா. ’24’ படத்திற்காக மூன்று முறை வெளியிடப்பட்ட போஸ்டர்களில் ஒவ்வொரு விதமாக இருக்கும் சூர்யாவால் படத்திற்கு இப்போதே ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இடையில் சூர்யாவை சிங்க முகத் தோற்றத்துடன் டிசைன் செய்து வெளியிடப்பட்ட ‘எஸ் 3′ படத்தின் போஸ்டருக்கு பிராயச்சித்தமாக இன்று வெளியிடப்பட்ட போஸ்டர் இருக்கிறது என்று கூட தாராளமாகச் சொல்லலாம்.

 

Comments

comments