2

மலையாளத்திலிருந்து இறக்குமதியாகும் நடிகைகளின் பின்னால் போகும் போக்கு தமிழ்சினிமாவில் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் குறிப்பிட்ட ஒரு நடிகையின் நடிப்பைப் பார்த்துவிட்டு அவரது திறமை, மற்றும் அவர் நடித்த படத்தின் வெற்றி ஆகியவற்றின் அடிப்படையில்தான் வாய்ப்பு கொடுத்தார்கள்.

இந்த வழக்கம் இப்போது இல்லை.

ஒரு நடிகை நடித்த முதல் படம் வெளியாகும் முன்பே அந்த நடிகையைத் தேடிப்போய் அவரது காலடியில் கோடிகளைக் கொட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

கடந்த வருடம் கீர்த்தி சுரேஷ் பின்னால் போனார்கள். ரஜினி முருகன் என்ற படத்தில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி மட்டும்தான் வெளியாகி இருந்தது.

இயக்குநர் ஏ.எல். விஜய் அடுத்த பிளைட்டைப் பிடித்துப்போய் இது என்ன மாயம் படத்துக்கு கீர்த்தி சுரேஷை புக் பண்ணிவிட்டு வந்தார்.

ரஜினி முருகன் படம் வெளியாவதற்குள் நான்கைந்து படங்களில் கமிட்டாகி, கோடிகளில் சம்பளம் கேட்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

இந்த வருடம் மற்றொரு மலையாள வரவான மஞ்சிமா மோகனைத் துரத்த ஆரம்பித்துள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழுக்கு வருகிறார் மஞ்சிமா மோகன்.

இவர் நடித்த முதல் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

அதற்கு முன்னதாகவே வேறு இரண்டு படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் அடுத்து விக்ரம் பிரபுவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடி மஞ்சிமா மோகன் தான்.

இந்த படம் தவிர உதயநிதி ஸ்டாலினும் விஷ்ணுவிஷாலும் இணைந்து நடிக்க, சுசுசீந்திரன் இயக்கும் படத்திலும் மஞ்சிமாதான் கதாநாயகி

இவ்விரு படங்கள் தவிர வேறு இரண்டு படங்களிலும் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் மஞ்சிமா மோகன்.

கொஞ்சம் பார்க்க அழகா இருந்திடக் கூடாது…

நம்ம ஹீரோக்களின் சிபாரிசு விரல்கள் அந்த நடிகையின் பக்கம் நீண்டுவிடும்.

Comments

comments