ந்த வருடம் பொங்கலுக்கு போட்டி போட்டுக்கொண்டு 4 பெரிய படங்கள் வெளியாகவுள்ளன.

வெள்ளி அன்று பொங்கல் என்ற நிலையில் வெள்ளி , சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் விடுமுறையை சரியாக டார்கெட் செய்துள்ளன இந்தப் படங்கள். விஷாலின் கதகளி, பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை, சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், உதயநிதியின் கெத்து.

எந்தப் படம் எப்படி இருக்கும்?

தகளி:

Vishal-Catherine-Tresa-Kathakali-7

விஷால், கேத்ரீன் தெரசா, சூரி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படம். படத்துக்கு இசை ஹிப்ஹாப் தமிழா. விஷால், பாண்டிராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் , இதுவரை நாம் பார்த்திராத விஷால் படமாக இருக்கும் என்கிறார் பாண்டிராஜ். கதகளி நடனத்தில் எப்படி முக பாவங்களும், கைகளும் பேசுமோ, அப்படித்தான் இந்தக் கதையின் நாயகன் வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவத்தால் ஏற்படும் உணர்வுகளும் விளைவுகளும் தான் கதை எனக் கூறியுள்ளார். பசங்க, இது நம்ம ஆளு என இரு படங்களுக்கு இடையிலேயே இந்தப் படத்தையும் விரைந்து முடித்துள்ளார் பாண்டிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

தாரை தப்பட்டை:

01 (85)

பாலாவின் அடுத்த படைப்பு. கரகாட்டக் கலைஞர்கள் தான் கதையின் பின்னணி, இளையராஜா இசையில் அவருக்கு இது ஆயிரமாவது படம். சசிகுமார் நாதஸ்வர இசைக் கலைஞராகவும், வரலட்சுமி கரகாட்ட நடனக் கலைஞராகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் இசைக்காக முதலில் ஒப்பந்தமானவர் ஜி.வி.பிரகாஷ் பின்னர் சில காரணங்களால் இளையராஜா ஒப்பந்தமானார். அதே போல் வரலட்சுமி கேரக்டருக்கு ஸ்ரேயா சரணிடமும் பேசப்பட்டது. இந்தப் படத்திற்காக இளையராஜா 12 பாடல்களை லைவ் ஆர்கெஸ்ட்ரா வைத்து பதிவு செய்தார். படப்பிடிப்பிற்கு இடையிலேயே சசிகுமாருக்கு காயம் ஏற்பட்டு மூன்று மாதங்கள் கழித்து க்ளைமாக்ஸ் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பாலாவின் படங்கள் என்றாலே விருது ஸ்பெஷல் எனலாம் என்பதால் சினிமாவின் முக்கியஸ்தர்கள் பலரும் கூட பாலாவின் படத்தை எதிர்நோக்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கெத்து:

Gethu Movie Stills (15)

மான் கராத்தே இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் க்ரைம் த்ரில்லர் படம். உதயநிதி ஸ்டாலின் இதற்கு முந்தைய படங்களைக் காட்டிலும் தோற்றத்தில் அதீத மாற்றங்கள் செய்து, ஸ்டைலிஷாக மாறியுள்ளது இந்தப் படத்துக்காகத் தான்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு முதலில் டி.இமான் ஒப்பந்தம் ஆனார். படத்தில் வில்லனாக விக்ராந்த் நடித்துள்ளார்.திருக்குமரன் படம் என்பதால் கலர்ஃபுல் பாடல்கள், ட்ரெண்டி ஆடை வடிவமைப்புகள் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

ரஜினிமுருகன் :

1432977007_keerthi-suresh-sivakarthikeyan-stills-rajini-murugan-movie

நீண்ட நாட்கள் கழித்து சிவகார்த்திகேயன் மீண்டும் காமெடி சரவெடி கொடுக்கப்போகும் படம். சென்ற வருடத்தில் பல முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன படங்களில் இந்தப் படமும் ஒன்று. தயாரிப்பாளர்கள் பிரச்னை, ரிலீஸ் ஆவதில் சிக்கல் என பல தடைகளைச் சந்தித்த படம். பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடித்திருக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனியும் முக்கிய ரோலில் நடித்துள்ளார், கிராமத்து இளைஞர்களின் ரவுசு, காதல் ஆகியன இருப்பதால் பொங்கல் ஸ்பெஷல் படமென்றாலும் பொருந்தும். இசை டி.இமான். பாடல்களும் முன்பே ஹிட்டடித்துள்ள நிலையில் நான்கு படங்களிலும் குடும்பங்கள் பார்க்கும் படம் என்றால் அது ரஜினிமுருகன் என்றும் சொல்லலாம், இந்த நான்கு படங்களில் எது வரவேற்புப் பெறும், எது விருது பெறும், எது பாக்ஸ் ஆபீசை நிறைக்கும் என்பது இன்னும் நான்கு நாட்களில் தெரிந்துவிடும்.

Comments

comments