1

தமிழ் சினிமாவில் அவ்வப்போது ‘காப்பி’ படங்களின் எண்ணிக்கை அதிகமாக வருவதுண்டு. சமீப காலமாக கொஞ்சம் குறைந்த இந்த கலாச்சாரம் தற்போது மீண்டும் தலை எடுக்க ஆரம்பித்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களாக இருக்கும் கௌதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் கூட ஹாலிவுட் படங்களைக் காப்பியடித்து படங்களை எடுத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. சமீப காலமாக ஹாலிவுட் படங்களிலிருந்து மாறிய நமது இயக்குனர்கள் சிலரின் பார்வை கொரியன் படங்களின் மீதும் வேறு உலக மொழிப் படங்களின் மீதும் பட்டது.

யூ டியூப் போன்றவற்றால் உலக அளவில் தமிழ்ப் படங்களின் டீசர்கள், டிரைலர்கள், படங்கள் பரவுவதால் எளிதல் அவை எந்தப் படங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்பதை அவை வெளியான உடனே ரசிகர்கள் சொல்லிவிடுகிறார்கள். அதனால்தான் கமல்ஹாசன் கூட அவர் சமீபத்தில் எடுத்த ‘தூங்காவனம்’ படத்தைக் கூட ‘ஸ்லீப்லஸ் நைட்’ என்ற பிரெஞ்சு மொழிப் படத்தின் உரிமை வாங்கி செய்தார்.

‘சென்னை 28′ படத்தில் கதாநாயகியாக அறிமுகமா ‘அஞ்சாதே, கற்றது களவு, கன யுத்தம், வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்த விஜயலட்சுமி தயாரிப்பில் அவருடைய கணவர் ஃபெரோஸ் இயக்கியுள்ள ‘பண்டிகை’ படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. அது வெளியான உடனே அந்தப் படம் ‘ஃபைட் கிளட்’ என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என்ற விமர்சனம் எழுந்தது.

அது குறித்து படத்தின் தயாரிப்பாளர் விஜயலட்சுமி, “பண்டிகை’ படம் ‘ஃபைட் கிளப் படமா ? என்று கேட்கிறார்கள். அது குறித்து விளக்க வேண்டும் என்று நான் ஆவலுடன் உள்ளேன். ஆனால், என்ன அவசரம், இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்,” என்று கூறியுள்ளார்.

 

Comments

comments