0c9a5800843a3450394d62af0c9c2996

விஷால், கேத்ரின் தெரசா நடிப்பிலும், பாண்டிராஜ் இயக்கத்திலும் சமீபத்தில் வெளியான படம் கதகளி. இதில் வில்லன் தம்பா ஒரு வசனத்தில் “அந்தந்த ஜாதிக்காரர்கள் அவர்களுக்கான வேலையைத்தான் செய்யணும்” என்ற பொருள் பட ஒரு வசனம் பேசுவார். இந்த வசனம் தங்களை புண்படுத்துவதாகவும், இழிவுபடுத்துவதாகவும் கூறி முடிதிருத்துவோர் சங்கம் வழக்கு தொடர முடிவு செய்துள்ளளது.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட முடிதிருத்துவோர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நீடாமங்கலத்தில் நடந்தது. சங்கத்தின் தலைவர் பெல் மாறன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் சமீபத்தில் வெளிவந்த கதகளி படத்தில் வில்லன், வண்ணார், மருத்துவர், அருந்ததியர் சமூகம் பற்றி இழிவாக பேசுகிறார். அது எங்கள் இன மக்களை இழிவானவர்களாக சித்தரிப்பதாகும். இதை கண்டித்து இயக்குனர் பாண்டிராஜ் வீடு, வசனத்துக்கு அனுமதி அளித்த தணிக்கை குழு அலுவலகம் ஆகியவற்றின் முன்பு போராட்டம் நடத்தப்படும். சம்பந்தப்பட்ட வசனம் நீக்கப்படாவிட்டால் இயக்குனர் பாண்டிராஜ் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும். என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Comments

comments