1

நடிகர் ரா.பார்த்திபன் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார் – மீடியாக்களுக்கு.

அந்தக் கடிதம் உங்கள் பார்வைக்கு…

BEEP sound மகாபாரதித்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நடிகர் சிவக்குமார் சொற்பொழிவில் கண்டு கொண்டேன்.
அஸ்வதாம யானை கொண்றுவிட்டேன் என்று
சொல்ல செய்து ‘யானை’ என்ற வார்த்தையின்
மீது பகவான் கிருஷ்ணன்
BEEEEP (சங்கு) ஊதி அந்த வார்த்தையை அமுக்கி அப்போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு உத்தியாக பயன்படுத்தி இருக்கிறார். அப்படி இப் பாரத்த்தில் இந்த சாதா/ராதாகிருஷ்ணன் வெள்ள  சேதத்தையும்,
2015-ல்  உள்ள ‘உள்ள’சேதத்தையும் ஒரு முடிவுக்கும் அடுத்து பிறக்கும் விடிவுக்கும் (sweet 16)
வெளிச்சம் பாய்ச்ச எந்த ஆபாச வார்த்தையின் மீதும் beep sound போடாமல்
‘பீப் பீப் பீப்பி ஊதுடா
Hap hap happy tune-னிலே
தூக் தூக் தூக்கி போடுடா- உன்
சோகத்தை dust bin-னிலே” என அனுபல்லவி எழுத து’வங்கி’ yeah தன் வங்கி கணக்கிலிருந்து சில லட்சங்களை களவாடி அதில் பல்லவி பாடியிருக்கிறார் இப்படி…
” துக்கம் என்பது shit-டுதான்
துடைக்க tissue போதுன்டா- don’t
Make it big issue டா
டா டா டடாடா – இந்த
டான்சே tasmac போதைடா
போதைடா ஆடுடா நீ ஆடுடா”
போதையில ஆடாதே- மகிழ்வோட
ஆட்றதே real போதை என்ற tasmac -க்கு எதிராக பொங்கும் பெண்பால் பால் உள்ள அன்பாலும்,
சலிப்பை துப்ப அடிக்கடி “Shit’ என பீத்திக்கொள்ளும் youth சமூகத்தை லாவகமாக வளைத்து போட்டு . ‘அதற்கு’ எப்படி tissue போதுமோ அவ்வளவு தான் துக்கமும் என்று அந்த issue துடைத்து எறியப்பட்டிருக்கிறது.

எதையும் நாம் இழக்கவில்லை
எல்லோருமே இன்று லாபத்தில் தான்
“வந்த நாளில் அம்மணம்
வாழம் போதோ கோமணம்
கணக்கு பாத்தா லாபம் தான் ”
என
தத்(துவ)தாட்டமும்
குத்தாட்டமும் நிரைந்த
கொண்டாட்டமாய்
சத்யா இசையில்
நான் இயற்றி sorry எழுதி
‘BEEP 2016’ என்ற ஈர்ப்பு திசையில்
‘த்துதா
மகித
லகுதா ‘
என்ற பாடலை நான் என் சொந்தமாக
துவங்கியுள்ள ME&YOUtube channel மூலம்
பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின்
பார்வைக்குள் பதிவிடுகிறேன்.
நன்றி!

இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

Comments

comments